உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "வெற்று வாக்குறுதி கொடுத்த திமுக": அண்ணாமலை தாக்கு

"வெற்று வாக்குறுதி கொடுத்த திமுக": அண்ணாமலை தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று வெற்று வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில், ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறி, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள பெருகுடா என்ற இடத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிக் கொண்டிருக்கிறது. இதனால், அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, தமிழக விவசாயிகள் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாவார்கள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1e2f5b0f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சந்தர்ப்பவாத கூட்டணி

ஆனால், தமிழக விவசாயிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திமுக அரசு. பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பணை கட்டுவதையும் தடுக்கவில்லை. தங்கள் சந்தர்ப்பவாத இண்டியா கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனையும், உரிமைகளையும் அடகு வைக்க, திமுக எப்போதும் தயங்கியதே இல்லை. ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீர் மற்றும் மழை நீர் அனைத்தும் தடுப்பணை இன்றி கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.

வெற்று வாக்குறுதி

ஆட்சிக்கு வந்தவுடன், 1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று வெற்று வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில், ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. உண்மையில், கோபாலபுரக் குடும்பத்தின் நலனைத் தவிர, பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உடனடியாக, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து, சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

N MARIAPPAN
மே 21, 2024 09:36

நீங்க கொடுத்த வாக்குறுதி பத்தி பேசலாமா


R SRINIVASAN
மே 21, 2024 07:47

எல்லோருக்கும் அரசங்கவேலை என்பது குதிரைக்கொம்பு காரணம் எல்லாம் டிஜிட்டல் மயமாகிக்கொண்டிருக்கிறது இதைதான் முன்னாள் பாரத பிரதமர் சந்திரசேகர் இல்லாத வேலைக்கு எதற்கு இட வொதிக்கீடு என்று கேட்டார் மேலும் மோடி அரசு startup நிறுவனங்களை நிறைய துவக்கி வேலை வாய்ப்பை நிறையபேருக்கு உருவாக்கி கொடுத்திருக்கிறது அண்ணாமலை அவர்கள் மோடி ஆட்சியில் அமர்ந்தவுடன் நதி நீர் இணைப்பு திட்டத்தை கையில் எடுக்க வலியுறுத்த வேண்டும்


chandramohan
மே 20, 2024 21:43

Dedicated komanam audi car utive chairman


chandramohan
மே 20, 2024 21:42

Dedicated to செங்கல் thief


sankaranarayanan
மே 20, 2024 21:39

கோமணத்தை கட்டிக்கொண்டு புதில்லியில் ஜந்தர்மந்தரில் தண்ணிருக்காக ஆர்ப்பாட்டம் செய்த அய்யாக்கண்ணு எங்கே சற்றே அவரும் அவருடைய கூட்டாளிகளும் தமிழக அரசு கோட்டைமுன் இதே ஆர்ப்பாட்டம் இப்போது செய்ய முடியுமா? மூன்று பக்கமும் அண்டை மாநிலங்கள் அணைகள் கட்டி ஒரு சொட்டு தண்ணீர் தமிழகத்திற்கு வராமல் தடுக்க ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது வந்துகொண்டிருக்கும் தண்ணிரும் இனி வாராது டெல்டா விவசாயிகள் விழித்துக்கொள்ள வேண்டும்


Kannan
மே 20, 2024 21:13

மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார்தன் மகனின் நலம் ஒன்றேதான் கருத்தில் கொள்ளுவார்


sundarsvpr
மே 20, 2024 19:04

மாநிலத்திர்குள் அணை கட்டுவதில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லை மாநிலங்களைப்படையே ஏற்படும் தகராறுகளை யார் முடிவுசெய்வது? மத்திய அரசு செய்ய வேண்டும் மாநில கட்சிகள் செயல்பாடுகள் தேசிய உணர்வு இல்லாமை இதன் காரணமாய் மத்திய அரசு ஒரு பலமான தீர்வை நோக்கி செல்ல திறனற்று உள்ளது மக்கள் தேசிய நீரோட்டத்திற்கு தடையாய் உள்ள மாநில கட்சிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவேண்டும்


Anantharaman Srinivasan
மே 20, 2024 18:52

திமுக, கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில், ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லையென்று அண்ணாமலை சொல்வது பச்சைபொய் உதயநிதி இரண்டாடுகளுக்கு முன் எய்ம்ஸ்க்காக ஒரு செங்கலை தூக்கிக்காட்டி அன்றே கீழே வைத்து விட்டார்


G Mahalingam
மே 20, 2024 18:13

கடந்த பத்து ஆண்டுகளில் கோடி வேலை வாய்ப்பு உருவாக்கி இருப்பதாக மோடி சொல்கிறார் அரசாங்க வேலை மட்டுமே லட்சம் பேருக்கு கொடுத்து உள்ளார்


விஜயன்
மே 20, 2024 17:04

அசல் நயம் பானுசி லட்சம், ரெண்டு கோடி வேலை அல்லாருக்கும் வூடு போன்ற கேரண்டியான வாக்குறுதிகளுக்கு எங்களை அணுகவும்.


Sakthi,sivagangai
மே 20, 2024 17:17

இப்படிக்கு, உருட்டு


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ