உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் எதிர்த்து திமுக மனு: நவ.,11ல் விசாரணை என சுப்ரீம்கோர்ட் அறிவிப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் எதிர்த்து திமுக மனு: நவ.,11ல் விசாரணை என சுப்ரீம்கோர்ட் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணிகளுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு, சுப்ரீம்கோர்ட்டில் நவம்பர் 11ம் தேதி விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளை தமிழகத்தில் மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது,' என, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறார். அந்த மனுவில், 'பீஹார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் தீவிர திருத்த பணிகளில் நிறைய குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. அது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கில், இன்னமும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அவசர அவசரமாக தமிழகத்தில் இந்த திருத்த பணிகளை, தேர்தல் ஆணையம் மேற்கொள்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது.தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த சூழலில், அவசரமாக இந்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவது நியாயமான நடைமுறை அல்ல.இந்த பணிகள் மேற்கொள்ளும் காலக்கட்டத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதனால், பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். தேர்தல் கமிஷன் கேட்கும் ஆவணங்கள் முறையாக சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்படலாம். இதனால், பலரும் தங்களுடைய ஓட்டுரிமையை இழக்கக்கூடிய அபாயம் உள்ளது. அதனால், வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணிகளுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு, சுப்ரீம்கோர்ட்டில் நவம்பர் 11ம் தேதி விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

xxxx
நவ 07, 2025 17:59

விசாரணைக்கு ஏற்கவில்லை என்று சொன்னால் தான் ஆச்சர்யம்


S Kalyanaraman
நவ 07, 2025 16:19

கவாய் தான் ஓய்வு பெறுவதற்கு முன் அதிரடையாக நிறைய தீர்ப்பு கொடுத்துவிட்டு போக போகிறார்.


Subramaniyan Narayanamoorthy
நவ 07, 2025 15:53

தேர்தல் கமிஷனுக்கு என தனியாக எந்த ஒரு அலுவலரும் மாநில முதன்மை தேர்தல் அலுவலரை தவிர கிடையாது. தேர்தல் தொடர்பான எந்த பணியாக இருந்தாலும்- வாக்காளர் பெயர் சேர்க்க கணக்கெடுப்பு செய்தல், வாக்காளர் பட்டியல் தயார் செய்தல், தேர்தல் நடத்துதல் இவை எல்லாவற்றையும் அந்தந்த மாநில ஊழியர்கள் தான் செய்கிறார்கள். மாநிலத்தை ஆளும் பொறுப்பில் இருக்கும் அரசுக்கு / கட்சிக்கு தங்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மீது நம்பிக்கை இல்லையா என்று தெரியவில்லை. வாக்காளர் கணக்கு எடுக்கும் பணியில் ஆளும் கட்சிக்கு பாதகமாக நடந்து கொண்டால் தங்கள் நிலை என்ன ஆகும் என்று அரசு ஊழியர்களுக்கு தெரியாதா. 2002 - 2004 ஆண்டுக்கு பின்பு வெளியான வாக்காளர் பட்டியலில் இருக்கும் தனது பெயரை மீளவும் பட்டியலில் தக்க வைத்துக் கொள்ள ஒருவர் அளிக்க வேண்டிய ஆதாரங்கள் கேட்டால் அது தவறா? அது தவறு என்றால், ஏற்கனவே 2002-2004 க்கு பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் எந்த ஆதார அடிப்படையும் இல்லாமல் பெயர் சேர்க்க மாநில அரசு ஊழியர்கள் அவர்கள் தானே கணக்கு எடுத்தார்கள் பரிந்துரைத்தார்களா? 2002- 2004 ன் போது நடந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் போது கேட்கப்பட்ட அதே ஆதாரங்களை மட்டுமே கேட்க வேண்டும் என்றால் தற்போது உள்ள பட்டியலில் காணும் குறைகளை களைய வேறு கூடுதல் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும் என்பது தவறா? நடைமுறையில் ஏற்படும் மாறுதல்களுக்கு ஏற்ப சட்ட விதி முறைகள் / வழிகாட்டுதல்கள் வகுக்கப்பதில்லையா? ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் ஆகியவை , அடுத்த ஆண்டின் ஜனவரி முதல் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அப்போதும் கூட அளிக்கப்படும் விண்ணப்பங்கள், வீடு தோறும் சென்று சரி பார்க்கப்பட்ட பிறகு தான் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், அடுத்த ஆண்ட துவக்கத்திலும், மழை காலம், பண்டிகை காலம் ஆகியவை வந்து கொண்டு தானே இருந்தன. அது மட்டும் இல்லாமல் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு கூட வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் வரை பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் ஆகிய பணி நடை பெற்று வாக்கு சாவடிக்கு அந்த பட்டியலும் தானே வாக்கு பதிவின் போது அனுப்பப்படுகிறன்றன. அப்போது எல்லாம் எழுப்பாத அரை கூவல் இப்போது மட்டும் ஏன்? தற்போது உள்ள வாக்காளர் பட்டியல் ஏற்கனவே எந்த ஆதாரம் இல்லாமல் சேர்க்கப்பட்ட பெயர்களுடன் சாதகமாக உள்ளது. அது திருத்தப்பட்டால் அவ்வாறு சேர்க்கப்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டு விடும். அது பாதகமாக இருக்கும். இது தானே தற்போதைய கோட்பாடு. பீகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வெளி வருவதற்குள் என்ன அவசரம் என்று கேட்கப்படுகிறது. நீதி மன்றம் ஒரு செயல் செய்ய தடை விதித்தால் மட்டுமே அதை செய்ய முடியாது. அவ்வாறு தடை ஏதும் விதிக்க படதாதால் தானே அங்கு தேர்தலே தற்போது நடக்கிறது. அப்படி இருக்கையில் தமிழ் நாடு, மேற்கு வங்கம் போன்ற 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்துவதை எதிர்ப்பது எந்த அடிப்படியில்? ஒரு கட்சி வெற்றி பெற்றால் வாக்கு பதிவு இயந்திரம் சரியாக உள்ளது என்றும், அந்த கட்சி தோற்றால், வாக்கு பதிவு இயந்திரம் மூலம் மோசடி என்று சொல்வது போல் இதுவும் உள்ளது.


SP
நவ 07, 2025 15:33

எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்திருக்க வேண்டும்


NALAM VIRUMBI
நவ 07, 2025 14:47

தேச நலன் மற்றும் நாட்டுப் பாதுகாப்பு சம்பத்தப்பட்ட விசயங்களில் உச்ச நீதி மன்றம் விளையாடுகிறது.


ஆரூர் ரங்
நவ 07, 2025 14:33

கோர்ட் அநாவசிய அரசியலுக்கான வழக்கை ஏற்கும் முன் சிந்தித்திருக்க வேண்டும்.


சந்திரன்
நவ 07, 2025 14:22

இரண்டு மூன்று இடங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் பெயர்கள் நீக்கம் செய்ய படும். இது மாடலுக்கு பெரும் இழப்புதானே


Iyer
நவ 07, 2025 14:09

நமது நீதித்துறை - செய்யவேண்டிய வேலைகளை செய்யவே செய்யாது - மழுப்பல் மறைத்தலில் ஈடு படும் லக்ஷக்கணக்கான வழக்குகள் பலவருடங்களாக நிலுவையில் உள்ளன. NO ACTION FROM JUDICIARY நீதிபதி வீட்டில் மூட்டை மூட்டையாக லஞ்சப்பணம் சிக்கியது. NO ACTION FROM JUDICIARY. தேர்தல் கமிஷன் பணிகளில் குறுக்கிட நீதித்துறைக்கு அதிகாரமோ அவசியமோ இல்லை. இருந்தும் தன் சொந்த வேலைகளை செய்யாமல், தேர்தல் கமிஷன் வேலைகளில் மூக்கை நுழைக்கும் தேர்தல் கமிஷன் இந்த முறை நீதித்துறையின் பூச்சாண்டிக்கு பயப்படாமல் தன வேலையை இஷ்டப்படி செய்யும் என நம்புகிறோம்


Anbuselvan
நவ 07, 2025 13:52

இவர்கள் கூட்டத்தில் கூறிய காரணம் வேறு அது வேற வாய் நீதிமன்றத்தில் கூறிய காரணம் வேறு இது வேற வாய். நீதிமன்றம் நிச்சயம் இவர்கள் கூறிய காரணங்களை ஏற்று கொள்ளும் ஆனால் தடை விதிக்காது. ஒரு மாதத்திற்கு பதிலாக இரண்டு மாதங்களாக நீட்டிக்கும். ஆனால பட்ட பீஹாரிலேயே நீதிமன்றம் தடை செய்யவில்லை. ஆதார் அட்டையை ஆதாரமாக எடுத்து கொள்ள வேண்டும் எனத்தான் கூறியது. இதுவரை ஒரு தனிப்பட்ட மனிதர் கூட தேர்தல் ஆணையத்தில் புகார் கூறவில்லை. அரசியல் லாபம். அவ்வுளவுதான்.


Modisha
நவ 07, 2025 13:28

ஐஐயோ , கவாய் விசாரிக்கபோறாராம் .


சமீபத்திய செய்தி