உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகார அத்துமீறல்களை திமுக நிறுத்தணும்: அண்ணாமலை காட்டம்

அதிகார அத்துமீறல்களை திமுக நிறுத்தணும்: அண்ணாமலை காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அதிகார அத்துமீறல்களை, திமுக உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: மத்திய தேர்தல் கமிஷனின் வாக்காளர் தீவிர சிறப்பு சுருக்க முறை திருத்தத்திற்கு எதிர்ப்பு என்ற பெயரில், கோவை சிவானந்தா காலனி பகுதியில் திமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் காட்டுவதற்காக, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருப்பூர் பணிமனையில் இருந்தும் அரசுப் பஸ்களில், திமுகவினர் ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர். கோவை மாநகரில் உள்ள ஒவ்வொரு பகுதியில் இருந்தும், குறைந்தது 10 அரசுப் பஸ்கள், திமுக ஆர்ப்பாட்டத்துக்காக பயன்படுத்தப்படுகிறது. திமுகவினரின் இந்த அதிகார துஷ்பிரயோகம் காரணமாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், அரசுப் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள், போதுமான பஸ்கள் இன்றி கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.திமுகவினர், பொய்யான கூட்டம் காட்டி, முதல்வர் ஸ்டாலினை ஏமாற்ற, சாதாரண பொதுமக்களைத் துன்புறுத்துவதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். இதுபோன்ற அதிகார அத்துமீறல்களை, திமுக உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

ஆரூர் ரங்
நவ 11, 2025 15:59

தலைவர் தாத்தாவே டிக்கட் வாங்காமல் திருட்டுத்தனமாக சென்னைக்கு வந்தவர். உ.பி ஸ் வேற மாதிரியா இருப்பாங்க?


ஆரூர் ரங்
நவ 11, 2025 15:57

அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் திணறுகிறது. ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு பல நூறு கோடி பணப்பலன்கள் பாக்கி வைத்துள்ளதாம். .


Sun
நவ 11, 2025 15:41

அண்ணன் வர, வர முழு நேர அறிக்கை அரசியல்வாதியா மாறிக்கிட்டு வர்ராரு. யாரு கேட்டா இவர்கிட்ட அறிக்கையை ? அதிகாரத்தை அத்துமீறும் தி.மு.க வை வீட்டிற்கு அனுப்ப இவர் உண்மையிலேயே நினைத்திருந்தால் இவர் சார்ந்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் பா.ஜ.க வின் சட்டமன்ற தேர்தல் திட்டம் தொடர்பான நிர்மலா சீத்தாராமனின் இன்றைய கோவை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பார். இவர் இப்ப செய்வதெல்லாம் அடிக்கிற மாதிரி நான் அடிக்கிறேன்! அழுகிற மாதிரி அழு அந்தக் கதைதான்.


Mario
நவ 11, 2025 14:39

அதிகார அத்துமீறல்களை பிஜேபி நிறுத்தணும்: மக்கள் காட்டம்


SUBBU,MADURAI
நவ 11, 2025 15:05

பொய் சொல்லாதே...


தமிழன்
நவ 11, 2025 15:52

மரியோ அவர்களே பொய் பேசாதீர்கள்.


Marai Nayagan
நவ 11, 2025 14:30

திருட்டு திமுக இதை செய்ய வில்லை என்றால் தான் ஆச்சர்யம்...தட்டி கேட்க அண்ணாமலை போன்ற ஒரு தலைவன் மட்டுமே உள்ளார்


Marai Nayagan
நவ 11, 2025 14:28

திருட்டு திமுக என்றாலே மக்களை மடை மாற்றி கொள்ளை அடிப்பது மட்டுமெ தொழில்...இங்கே அண்ணாமலை அவர்களின் நேர்மையை மறைக்க சில 200 டாஸ்மாக் ஊபிப்க்கள் பதிவிடுவது 200 க்கு மட்டுமெ


Govi
நவ 11, 2025 13:55

எல்லாம் சுமுகமா முடிக்க படும் உமக்கும் வரும்


Oviya Vijay
நவ 11, 2025 13:55

பிஜேபி செய்தி என்றாலே கதறல்கள் மிகவும் அருமை...ஆன்மீக ஆட்சி வருவதை, நீர் அல்ல, உமது மார்க்கத்தாலும், தடுக்க முடியாது...இருக்க இடம் கொடுத்தால்...


Priyan Vadanad
நவ 11, 2025 13:53

நிறுத்திட்டா போச்சி


bharathi
நவ 11, 2025 13:52

Annamalai ji it is time to act..lets not play election politics ...pls continue to expose all dravidian party in TN ensure keep your identity live...no more compromise...we need a clean state


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை