மருத்துவர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்
இந்திரபிரஸ்தா:கோல்கட்டா சம்பவத்தை கண்டித்து டில்லியில் நேற்று பல்வேறு மருத்துவர்கள் சங்கங்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு அங்குள்ள ஜூனியர் டாக்டர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கோல்கட்டாவில், ஏழு ஜூனியர் டாக்டர்கள் அக்டோபர் 5ம் தேதி இரவு முதல் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், டில்லியில் உள்ள மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லுாரி மருத்துவர்கள் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.நேற்று காலை 9:00 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் துவங்கி, மாலை 4:00 மணிக்கு நிறைவு பெற்றது.இந்த போராட்டத்தில் குரு தேக் பகதுார் மருத்துவமனையின் மருத்துவர்களும் இணைந்தனர். போராட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள், கருப்பு ரிப்பன்களை அணிந்தனர். அதே நேரத்தில் எய்ம்ஸ்- மருத்துவர்கள் சங்கத்தினர், ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடத்தினர்.