உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடும்ப வன்முறை சட்டம்: பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க கோர்ட் மறுப்பு

குடும்ப வன்முறை சட்டம்: பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க கோர்ட் மறுப்பு

புதுடில்லி:பெண்ணின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர் கோரிய படி, குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்க முடியாது என உத்தரவிட்டது. டில்லி கோர்ட்டின் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஷீட்டல் சவுத்ரி பிரதான் முன், ஒரு பெண்ணின் மேல் முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டது. அந்த பெண் கோரிய குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பாதுகாப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையை, இந்த நீதிமன்றம் மறுத்தது. இதுகுறித்து, நீதிபதி தன் உத்தரவில் கூறியதாவது: அந்த பெண்ணின் அப்பீல் மனுவில் ஏராளமான தவறுகள் மற்றும் பிழைகள் உள்ளன. தன்னை தன் கணவர் வீட்டினர் அடித்து துன்புறுத்திதாக கூறும் அந்த பெண், அதற்கான ஆதாரங்களை காட்டவில்லை. மேலும், போலீசிலும் அதற்கான ஆதாரத்தை அவர் சொல்லவில்லை. எனவே, அந்த பெண்ணின் கோரிக்கையான, குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ், அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது. அந்த பெண் கூறுவது அசைக்க முடியாத ஆதாரங்கள் இல்லை; சாதாரண புகார்கள். அவர் உண்மையிலேயே தன் கணவர் வீட்டினரால் துன்புறுத்தப்பட்டிருந்தால், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்திருக்க வேண்டும். அவ்வாறு அவர் செய்யவில்லை. அவர் சமர்பித்த ஆதாரங்களிலும் பல தவறுகள் உள்ளன. அவரின் பிறந்த தேதி, 1992 ஜனவரி 1 என குறிப்பிட்டுள்ளார். அவருக்கு திருமணம் நடந்தது, 2007 ஏப்ரல் 25ம் தேதி. அப்படியானால், அவர், தன், 15வது வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான எவ்வித ஆதாரங்களையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. வேண்டுமென்றே அவர் ஆதாரங்களை வழங்கவில்லையா அல்லது அவரிடம் இல்லையா என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. தன் கணவர் வீட்டினரால், தனித்து வாழ்வதாக அவர் கூறும் ஆண்டின் கணக்கும் சரியாக வரவில்லை. எனவே, குடும்ப வன்முறை வழக்கின் கீழ், அவரின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது வழக்கு தொடர முடியாது. அந்த சட்டத்தின் கீழ் அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ