உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இத்தாலி பிரதமர் மெலானியுடன் சினிமா பார்த்த டொனால்டு டிரம்ப்

இத்தாலி பிரதமர் மெலானியுடன் சினிமா பார்த்த டொனால்டு டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்பை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானி சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும், சினிமா பார்த்தபடி, இரவு விருந்தில் பங்கேற்றனர்.அமெரிக்காவின் அடுத்த அதிபராக, குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப், வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். அதிபர் தேர்தலில் அவர் வென்ற பின், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹங்கேரி பிரதமர் விக்டோர் ஓர்பான் உள்ளிட்டோர் சந்தித்தனர்.அந்த வகையில், ஐரோப்பிய நாடான இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலானி, டிரம்பை அவருடைய மாளிகையில் நேற்று சந்தித்துப் பேசினார். 'மிகச் சிறந்த பெண்' என, மெலானியை டிரம்ப் பாராட்டினார்.பின்னர், 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்ட ஒரு வழக்கறிஞர் தொடர்பான ஆவணப் படத்தை பார்த்தபடி, இருவரும் இரவு விருந்தில் பங்கேற்றனர்.தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அடுத்த சில நாட்களில் இத்தாலியின் ரோம் நகருக்கு செல்ல உள்ளார். அப்போது, ஜார்ஜியா மெலானியை சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில், தனிப்பட்ட முறையில் அமெரிக்கா சென்ற மெலானி, டொனால்டு டிரம்பை சந்தித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RAMAKRISHNAN NATESAN
ஜன 06, 2025 10:32

தனிப்பட்ட முறையில் அமெரிக்கா சென்ற மெலானி, டொனால்டு டிரம்ப்பை சந்தித்துள்ளார்.. இருவரும், சினிமா பார்த்தபடி, இரவு விருந்தில் பங்கேற்றனர்.. ஏற்கனவே எலான் மஸ்க் துண்டு போட்டு வெச்சிருக்காரு ன்னு சொல்றாங்க.. இப்போ ட்ரம்ப்புமா ???? ஒருவேளை ட்ரம்ப்பு நூத்துக்கு இருநூறு மார்க் வாங்குறவரா இருப்பாரோ ????


முக்கிய வீடியோ