உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்வியை அரசியல் ஆக்காதீர்கள்; முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

கல்வியை அரசியல் ஆக்காதீர்கள்; முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

புதுடில்லி: புதிய கல்வி கொள்கையை ஏற்க தமிழகம் மறுத்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார். 'கல்வியை அரசியல் ஆக்க வேண்டாம்' என முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கல்வியில் அரசியலைப் புகுத்தாதீர்கள். அரசியல் கருத்து வேறுபாடுகளை தாண்டி மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும். நமது மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியல் ஆக்க வேண்டாம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q3kv0ccn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புதிய கல்வி கொள்கையை குறுகிய மனப்பான்மையுடன் பார்ப்பது பொறுத்தமற்றது. அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள் உயர வேண்டும். புதிய கல்வி கொள்கையின்படி எந்த மொழியையும் எந்த மாநிலத்திலும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை. தாய்மொழியில் தரமான கல்வி பெறுவதை புதிய கல்வி கொள்கை உறுதி செய்கிறது. புதிய கல்வி கொள்கை நமது மொழியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மையை பாதுகாக்க கொண்டு வரப்பட்டுள்ளது.பா.ஜ., ஆட்சி செய்யாத மாநிலங்களும் புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. அரசியல் காரணங்களுக்காக, புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பதால், ஆசிரியர்கள், மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். காசி தமிழ் சங்கமம் மூலம் தமிழ் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ் மொழியை பிரதமர் மோடி உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். எந்தவொரு மாநிலத்திலும், எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை. 3வது மொழி விருப்பத்தின் அடிப்படையிலேயே தேர்வு செய்து கொள்ளலாம். சமூக மற்றும் சமூக முன்னேற்றத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மாணவர்கள் அவர்கள் விரும்பும் மொழியில் கல்வி கற்பதை புதிய கல்வி கொள்கை உறுதி செய்கிறது. அரசியல் காரணங்களுக்காக புதிய கல்வி கொள்கையை ஏற்று கொள்வதில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

Palanisamy T
பிப் 22, 2025 02:02

1.மத்திய அமைச்சர் அவர்களே, அன்று இந்திய நாடு இன்னும் சுதந்திரம் பெறாத நிலையில் அன்றே மொழியை அரசியலாக்கி தமிழகத்தில் ஆதிக்கம் பெற துடித்தவர்கள் நீங்கள். நீங்கள். இதில் கல்வியை அரசியலாக்காதீர்கள் என்ற உபதேசம் வேறு, என்னத்தைச் சொல்ல Tamilnadu will not forget the series of Justice Party pro against imposition of Hindi as compulsory language in schools and even as an entry requirement into civil service during Madras Province British rule in India in 1930s.


SVR
பிப் 22, 2025 00:15

இங்கு ஒரு புல்லாங்குழல் பசுமாடு மேய்ப்பவர் ஆர் டி ஐ போட்டு கேட்டதில் தமிழ் நாட்டில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றில் கூட தமிழ் ஆசிரியர் அமர்தப்படவில்லை என்று மத்திய அரசு கூறுவதாக சொல்லியிருக்கிறார். அவர் ஆர் டீ ஐ யின் தேதி மற்றும் பதிலின் தேதி எல்லாம் இங்கு கொடுக்கவேண்டும். மற்றும் மிக சமீபத்தில் ஒரு தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா வில் வேலை செய்யும் ஓர் பெண் ஆசிரியர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழியை கற்பித்து அதற்கு உண்டான சான்றிதழை அவர்களுக்கு கொடுத்து அவர்கள் மாநில அரசு கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்பினால் அதற்கு ஏதுவாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். இந்த ஆள் பம்மாத்து வேலை செய்வதை விட்டு சரியான தகவலை இங்கு பதிவிடவேண்டும்.


Ramesh Sargam
பிப் 21, 2025 20:30

திமுகவினர் இறந்த பிணத்தை கிடத்தி அரசியல் செய்பவர்கள். அவர்களிடம் போய் கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் என்று சொன்னால், அவர்கள் புத்தியில் ஏறுமா?


அப்பாவி
பிப் 21, 2025 17:35

ரெண்டு பார்ட்டியும் அரசியல் சாக்கடைகள். இதில் கல்வியில் அரசியல் செய்யக்கூடாதாம்.


Madras Madra
பிப் 21, 2025 17:32

மக்கள் மத்தியில் CBSE பள்ளிகளே முன்னுரிமை பெரும் காலம் திராவிட கல்வி கொள்கை காலாவதி ஆகி பல மாமாங்கம் ஆகிடுச்சி உங்க போலியான மொழி பற்றை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள் இப்போதே சுதாரித்து கொண்டு மும்மொழி கொள்கையை ஏற்று கொள்வது திராவிடத்துக்கு நல்லது இல்லை என்றால் நீங்கள் நடத்தும் CBSE பள்ளி கட்டணங்கள் குறைக்கப்பட்டு உங்கள் கொள்ளை லாபங்கள் ஒடுக்கப்படும்


தஞ்சை மன்னர்
பிப் 21, 2025 16:56

மூட மருது பாண்டிய நீ கூடத்தான் மாற்று மதத்தின் ஆள் என்று கூறுவேன் ஏற்று கொள்ளுவாயா கருத்து வேறுபாட்டை பற்றி கூறு என்று கூறினால் நீ இப்படி பேசுகிறாய்


P. SRINIVASAN
பிப் 21, 2025 16:46

கல்வின்னா என்னென்று தெரிந்துகொள்ள வர்ராரு.. கொஞ்சம் கத்துக்கிட்டு போகட்டும் இந்த சங்கி.


SVR
பிப் 21, 2025 17:33

ஒய் சீனப்பா, இப்போதான் ஒரு முக்கால் மணி நேரம் முன்பு தர்மேந்திரா ஒரு ஆங்கில டிவி சேனலுக்கு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதை பார் மாற்று கேள் மற்றும் புரிந்து கொள். இங்குள்ள பொய் மொழி எங்களுக்கு இரண்டு மொழி போதும் என்று முட்டாத்தனமா உளறியுள்ளார். அப்படின்னா உங்களுக்கு மத்திய அரசின் வரி பங்கிலிரிந்து நாங்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு பொங்க என்று சொல்லி விட்டார்கள். எதையோ குடித்த கொக்கப்பா என்று காற்றை குடித்துக்கொண்டு நன்றாக இருங்கள். கல்வியை பற்றி திராவிட அரக்கர்கள் மூலம் அவர் கற்று கொள்வதற்கு ஒன்றும் இல்லை. இந்த விஷயத்தில் அசடு ஆகப்போவது என்னமோ தமிழக மக்கள்தான்.


SVR
பிப் 21, 2025 17:55

ஒய் சீனப்ப்பா, ஒரு மணி நேரம் முன்பு தர்மேந்திரா ஒரு ஆங்கில டிவி சேனலுக்கு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதை பார் மற்றும் கேள். யாருக்கு கல்வி தேவை என்று புரியும். திராவிட அரக்கர்கள் இதையெல்லாம் உணரும் நிலயில் இல்லை மற்றும் இவர்களின் வீம்பால் தமிழ் மக்கள் பரிதாபமாக வீணாகி போய் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வர வேண்டிய பணத்தை வர விடாமல் இந்த திராவிட அரக்கர்கள் தடுத்து கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் தெரிந்து கொள்ளாமல் மக்களோ சோம பானத்தில் திளைத்து கொண்டிருக்கிறார்கள்.


SVR
பிப் 21, 2025 16:41

இங்கு விஷயம் தெரியாத அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடித்து கொண்டு இருக்கும் சிலரின் பதிவுகளை பார்த்து சிரிப்பதா அல்லது சிரிக்காமல் இருப்பதா? ஒன்றை கவனிக்க வேண்டும். என்ன அது? கல்வி என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரத்தில் உள்ள ஒரு சப்ஜெக்ட். மத்திய அரசும் தனது பங்கு வரி பணத்தை மாநிலங்களின் பன்முக வளர்ச்சிக்காக ,அதில் ஒன்று கல்வியும் உண்டு செலவழிக்க தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கொள்ளுங்கள். நாங்களும் அதற்கு உண்டான செலவுகளை ஏற்று கொள்கிறோம் என்று சொல்லி மும்மொழி கொள்கையை ஏற்று கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். அதை எந்த விதமான மொழி திணிப்பு இல்லை என்றும் மாணவர்கள் அவரவர் தாய் மொழியிலேயே படித்து, மற்றும் இரண்டு வெவ்வேறு மொழிகளையும் படித்து மாணவர்கள் முன்னேறட்டும் என்று சொல்கிறார்கள். இதில் இந்தி திணிப்பு என்பது இல்லை என்றும் தெளிவு படுத்தி இருக்கிறார்கள். இங்கு சில சூவன்னா கூவன் னா கேந்திரிய வித்யாலயாவில் தாய் மொழியிலேயே கற்று கொடுக்க வில்லையே என்று கூவி கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் அண்ணாமலையார் ஊடக சந்திப்பில் அந்த வாதத்தை ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை மூலம் தகர்த்து எரிந்திரிக்கிரார். கேந்திரிய வித்யாலயாவும் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து 10 மற்றும் 12 ஆவது வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் பயிற்றுவித்து அவர்களுக்கு தகுந்த சான்றிதழையும் கொடுத்து இருக்கிறார்கள் என்று கூறி யுள்ளார். அது சரி எல்லாம் எங்களுடைய வரி பணம் என்று கூறிக்கொண்டு திரியும் கும்பலுக்கு சொல்வது இது தான். யோவ் அறிவிலிகளா. பைனான்ஸ் கமிஷன் படி மத்திய அரசின் பங்குலிருந்து வரி பணத்தை எந்த மாநிலத்திற்கு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இதில் எந்த மாநில அரசும் தலையிட முடியாது. இது பாரத அரசியல் சட்டம் கொடுத்தது. இதை எந்த கொம்பனும் கேட்க முடியாது. மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளுங்கள் உங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் எங்கள் பங்கு பணம் தருகிறோம் என்று கூறுகிறார்கள்.


venugopal s
பிப் 21, 2025 20:37

தமிழகத்தில் உள்ள நாற்பத்தி ஒன்பது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றில் கூட தமிழாசிரியர் நியமனம் செய்யப்படவில்லை என்று ஆர் டி ஐ மூலம் மத்திய பாஜக அரசு ஒத்துக் கொண்டு உள்ளது உங்களுக்கு தெரியுமா?


naranam
பிப் 21, 2025 16:32

இதெல்லாம் இங்கிருப்பவருக்கு ஏறாது ஐயா! எப்படியாவது பதவி வேண்டுமே! அதற்குத் தான் இந்த ஜாதி சொரியார் என்ற வீண் பேச்சு


Tamil Inban
பிப் 21, 2025 16:28

s://www.facebook.com/share/r/12HfieHD1QE/?mibextid=wwXIfr


சமீபத்திய செய்தி