உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதத்தை வைத்து என்னுடன் விளையாடாதீர்கள்: பா.ஜ.,வுக்கு மம்தா பதிலடி

மதத்தை வைத்து என்னுடன் விளையாடாதீர்கள்: பா.ஜ.,வுக்கு மம்தா பதிலடி

கோல்கட்டா:'பா.ஜ., வெற்றி பெற்ற பிறகு முஸ்லிம் எம்.எல்.ஏ.க்களை மேற்குவங்க சட்டசபையில் இருந்து வெளியேற்றுவோம்,'என பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கூறினார்.மேற்கு வங்க சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பா.ஜ., அளித்த ஒத்திவைத்து தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தார். இதனை கண்டித்து சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதன் பிறகு சுவேந்து அதிகாரி கூறியதாவது: கடந்த நான்கு முதல் ஐந்து நாட்களில், தம்லுக் தொகுதியில் ஒரு சில பகுதிகளில் ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சிலைகள் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. முர்ஷிதாபாத்தின் நவாடா மற்றும் உலுபெரியா மாவட்டத்தில், ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர். ஹிந்து கடை உரிமையாளர்கள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன,உலுபெரியாவில், சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள் தாக்கப்பட்டனர். இது குறித்து சட்டசபையில் பேச அனுமதிக்கப்படவில்லை. இது சட்டவிரோதமானது. இது மேற்கு வங்க மக்களின் குரலை நெரிக்கும் நேரடி முயற்சி.சபாநாயகர் பிமன் பந்தோபாத்யாய் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜியை நாங்கள் தோற்கடிப்போம். பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு, திரிணமுல் கட்சியின் முஸ்லிம் எம்.எல்.ஏ.,க்களை அவையிலிருந்து வெளியேற்றுவோம். இவ்வாறு சுவேந்து அதிகாரி கூறினார்.இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: நான் ஒரு ஹிந்து, இதற்கு பா.ஜ., எனக்கு சான்றிதழ் கொடுக்க வேண்டியதில்லை. ஒருவர் ஹிந்துவோ, சீக்கியரோ, புத்தமோ, முஸ்லிமோ, கிறிஸ்தவரோ, ஒரு முதல்வராக, அவர்கள் அனைவரையும் அரவணைப்பது என் பொறுப்பு. என்னோடு ஹிந்து கார்டு வைத்து விளையாடாதீர்கள். என்று முதல்வர் மம்தா பதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ramani
மார் 13, 2025 07:53

மதத்தை வைத்து அரசியல் செய்வது தன் நீதான் அம்மணி. இல்லையென்றால் திருட்டுதனமாக வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களுக்கு சலுகைகள் தருவீங்களா


எவர்கிங்
மார் 13, 2025 03:56

ஆம், மமதை பயங்கரவாத/ஊடுருவல் காரர்களை உதவிக்கு வைத்துக் கொண்டு எதிரிகளை கூண்டோடு காலி செய்வார்


Raj Madhu
மார் 12, 2025 20:26

மதம்னா என்ன? மதம் கிற கான்செப்டே கிடையாது இத வச்சு அரசியல். இதல்லாம் ஒரு பொழப்பு


Sivagiri
மார் 12, 2025 20:24

ஒவ்வொரு மாநில கட்சிக்கும் ஒரு துருப்பு சீட்டு வச்சிருக்காங்க , , , மேவ-வில் , முஸ்லிம்ஸ் , கேரளாவில் - கிறிஸ்டின் முஸ்லிம்ஸ் , தமிழ்நாட்டில் மொழி / மற்றும் ஜாதி , - அப்பப்ப , தலையை தூக்கி பார்ப்பாங்க , எல்லோரும் கவனிச்சாங்கன்னா ரொம்ப ஆட்டம் போடுவாங்க , யாரும் கவனிக்கலேனா , சரிவிடு ன்னு வேலையை பார்க்கப் போயிடுவாய்ங்க . . .


Raj Madhu
மார் 12, 2025 20:20

பழைய மாதிரி மாத்தணும்னு நினைக்கணும்னு நினைக்காதீங்க, ஹிந்து உருவாக்கியது, நாங்க வேற இதுல அரசியல் பண்ணுறது வேற மாதிரி தோணுது


தமிழ்வேள்
மார் 12, 2025 20:10

முஸ்லீம் மத கருத்துப்படி இவரும் பெண் அடிமை.. ஹராம்/ ஜனானா வில் இருக்க வேண்டியவர்..இது புரியாமல் இந்த கும்பலுக்கு வக்காலத்து வாங்குகிறது...


Ramesh Sargam
மார் 12, 2025 19:43

மமதா, ஸ்டாலின், சோனியா, ராகுல், பினராயி விஜயன், முப்தி, அகிலேஷ் இவர்கள் எல்லாம் இந்தியாவில் வாழ்ந்துகொண்டு இந்தியாவை எதிர்க்கும் பச்சைதுரோகிகள். இவர்கள் ஒழிந்தால் இந்திய நாடு சுபிட்சமடையும்.


Iyer
மார் 12, 2025 19:40

இப்போதைக்கு மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்துவதே - தனம் ஆகும். சுமார் 1 கோடி பங்காளதேசிகளுக்கும், ரொஹிங்கியாக்களுக்கும் VOTER ID கொடுத்து தனக்கு சா தகமாக VOTE பெற்று வருகிறார் மம்தா. மேற்குவங்கத்தில் 10 வருடங்கள் தேர்தல் எதுவும் நடத்தாமல் பங்களாதேசிகளை அடையாளம் செய்து முதலில் அவர்களை விரட்டவேண்டும்


Raghavan
மார் 12, 2025 19:07

ரோஹிங்ககளின் முஸ்லீம் ஓட்டுக்களை பெறுவதற்கு என்ன என்ன வேலையெல்லாம் செய்தார். இப்போது மதத்தை வைத்து என்னிடம் விளையாட வேண்டாம் என்கிறார். இவர் சென்ற தடவை வெற்றிபெற்றதே அந்த ரோகிங்காகளாள் தான். இவருக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா? பேரைமட்டும் மம்தா பானர்ஜி என்று வங்காள மொழியில் வைத்துக்கொண்டு முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.


sridhar
மார் 12, 2025 18:37

தமிழகம் , மே வங்க ம் , கேரளா இங்கெலாம் ஹிந்துவே ஹிந்துக்கு எதிரி .


Minimole P C
மார் 12, 2025 19:32

Mamta is bramin and ex-congress leader. Due to her insane greediness for pomp and power made herself anti hindu and like DMK and AIADMK to corner miniories, particularly muslims she always targets Hindus. She adopts even third rated techniques and politics and illegal things to be in power. The present statement of her also like to that only. Hindus shall aware of this.


புதிய வீடியோ