உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்திவிடாதீங்க: கரண் சிங் வேண்டுகோள்

பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்திவிடாதீங்க: கரண் சிங் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: பயங்கரவாத தாக்குதல் நடந்த பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்தி விடாதீர்கள் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் கரண் சிங் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, முன்னாள் கவர்னரும், ஜம்மு காஷ்மீர் மன்னர் பரம்பரையை சேர்ந்தவருமான கரண் சிங் கூறியதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் துயரமானது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட கொடூரம் அனைவரையும், குறிப்பாக காஷ்மீர் மக்களை மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு, 3 கோடி மக்கள் பஹல்காமிற்கு சுற்றுலா வருவார்கள் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் இந்தத் தாக்குதல் அச்சத்தை உருவாக்கி உள்ளது. அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்ற நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது. பஹல்காமுக்கு சுற்றுலா வருவதை நிறுத்தி விடாதீர்கள். பஹல்காமிற்கு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருமாறு அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். மக்கள் எவ்வளவு பயப்படுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக பயங்கரவாதிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி விடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை