உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் பிரச்னையில் யாரின் மத்தியஸ்தமும் அவசியமில்லை: டிரம்புக்கு இந்தியா பதிலடி

காஷ்மீர் பிரச்னையில் யாரின் மத்தியஸ்தமும் அவசியமில்லை: டிரம்புக்கு இந்தியா பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காஷ்மீர் பிரச்னையில் எந்த நாட்டின் மத்தியஸ்தமும் அவசியம் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, 'ஆபரேஷன் சிந்துார்' என்ற பெயரில் இந்திய ராணுவம் கடந்த வாரத்தில் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதை எதிர்த்து பாகிஸ்தான் நடத்திய டிரோன், ஏவுகணை தாக்குதல்களை நமது வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக முறியடித்தன.இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் ஆபரேஷன் சிந்தூர் இன்னமும் முடிய வில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது. அதே நேரத்தில் எந்த சூழலிலும் தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்துக்கு முழு அதிகாரமும் அளிக்கப்பட்டு உள்ளது.பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா கடும் முஸ்தீபுகளை முன் எடுத்து வரும் நிலையில், காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருந்தார். அவரின் அறிவிப்பு, உலக நாடுகள் இடையே விவாதமாக மாறி உள்ள நிலையில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.காஷ்மீர் பிரச்னையில் எந்த நாட்டின் மத்தியஸ்தமும் அவசியம் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு தெளிவான நிலைப்பாடு இருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை மீட்பது மட்டும் தான் இன்னும் பாக்கியாக உள்ளது. இதில் இன்னொரு நாடு பேசுவதற்கு என்று வேறு எதுவும் இல்லை.பயங்கரவாதிகளை ஒப்படைப்பது பற்றி அவர்கள்(பாகிஸ்தான்) பேசினால் நாம் பேசலாம். வேறு எதையும் பேசுவதற்கு தயாராக இல்லை. யாரும் மத்தியஸ்தம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. யாரும் மத்தியஸ்தம் செய்ய எங்களுக்குத் தேவையும் இல்லை.இவ்வாறு மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

மணிவேல்
மே 12, 2025 08:53

ஆனா அடிச்சி புடிச்சிக்கிட்டு முதலில் அமெரிக்கா போவாரு.


Rajarajan
மே 12, 2025 05:59

இடையில் அமெரிக்கா மூக்கை நுழைத்து, அவசரமாக அறிக்கை வெளியிட்டது ஏன் என தெரியவில்லை. அதிருக்கட்டும். இந்தியா இன்னும் நான்கு முக்கிய பாகிஸ்தான் நகரங்களை இரவோடு இரவாக தாக்கி துவம்சம் செய்திருக்கலாம். ஆனால், முன்வைத்த காலை பின்வைத்தது ஏன் என்று இந்தியர் அனைவருக்குமே குழப்பமாக உள்ளது. வெண்ணை திரளும்போது, தாழி உடைந்தது ஏன் என மர்மமாக உள்ளது.


subramanian
மே 11, 2025 23:17

சரியான முடிவு.


Rathna
மே 11, 2025 22:13

ஜெய ஷங்கர் அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் பேசும் போதே, உங்கள் உதவி தேவையில்லை என்று தெரிவித்துவிட்டார். டிரம்ப் ஒரு கோமாளி ஆக இருப்பதால் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார். டிரம்ப் அழைக்கும் மீட்டிங்கிற்கு கூட புடின் வருவதில்லை. trump உடன் பேசுவதால் எனது நேரம் வீண் என்று வீடியோவிலேயே சொல்கிறார்.


Gnana Subramani
மே 11, 2025 21:51

வட்டாரங்கள் தெரிவித்து என்ன பயன். ஜீ நேரடியாக சொல்ல வேண்டும்.


spr
மே 11, 2025 21:27

"பயங்கரவாதிகளை ஒப்படைப்பது பற்றி அவர்கள்பாகிஸ்தான் பேசினால் நாம் பேசலாம். வேறு எதையும் பேசுவதற்கு தயாராக இல்லை. யாரும் மத்தியஸ்தம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. யாரும் மத்தியஸ்தம் செய்ய எங்களுக்குத் தேவையும் இல்லை." இது உண்மையான செய்தியாக இருந்தால், மோடி அரசைப் பாராட்டுவோம். இதனால் நமக்குத் பொருளாதார ரீதியாகப் பாதிப்பு இருக்கலாம் ஆனால் மக்கள் இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டால் பெரும் சிறப்பு


Santhakumar Srinivasalu
மே 11, 2025 20:58

அமெரிக்காவுக்கு தெளிவான மற்றும் சரியான பதில்!


Kasimani Baskaran
மே 11, 2025 20:48

அணுவாயுதக் கிடங்குக்கு வெடி வைத்தால் எல்லா நாடுகளுக்கும் பயம் வரத்தான் செய்யும். ஏலியன் கூட மத்தியஸ்தம் செய்ய வருவார்கள்.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
மே 11, 2025 20:26

இந்த நெஞ்சுரம் திரு. மோடி அவர்களுக்கு மட்டுமே உள்ளது. ஜெய்ஹிந்த்.


Gnana Subramani
மே 11, 2025 20:23

மத்திய அரசு இதுவரை டிரம்ப் சொன்னதற்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.


ஆரூர் ரங்
மே 12, 2025 09:33

கொஞ்சம் அது சரியில்லாதவர்களுக்கு பதில் அல்லது விளக்கம் கூறுவது அறிவாளிகள் செய்யும் செயலல்ல. தேவையற்றது.


முக்கிய வீடியோ