உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யாத்கிரில் இரட்டை கொலை

யாத்கிரில் இரட்டை கொலை

யாத்கிர்: யாத்கிர், சஹபுராவின் சத்தாபுரா கிராமத்தை சேர்ந்தவர்கள் பாப்பண்ணா, 52, அலி சாபா, 55. இவர்கள் பணி நிமித்தமாக சஹாபுரா சென்றிருந்தனர். நேற்று காலை 8:00 மணிக்கு பைக்கில் தங்களின் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.கிராமத்தின் அருகில் செல்லும் போது, வழிமறித்த மர்ம கும்பல், இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது. முன் விரோதம் காரணமாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. பட்டப்பகலில் நடந்த இரட்டை கொலை சம்பவம், கிராமத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சஹாபுரா போலீசார், விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ