உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  விமான நிலைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ட்ரோன் தடுப்பு சாதனம்

 விமான நிலைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ட்ரோன் தடுப்பு சாதனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலக நாடுகளுக்கு இடையே போர் அச்சுறுத்தல்கள் நிலவும் சூழலில், டில்லி, மும்பை போன்ற முக்கிய விமான நிலையங்கள் மற்றும் நம் நாட்டின் எல்லைப் பகுதிகளை ஒட்டியுள்ள விமான நிலையங்களில், 'ட் ரோன்' தடுப்பு சாதனங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு நம் ராணுவம் பதிலடி தந்தது. அப்போது, நம் நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள மாநிலங்கள் மீது, 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. எனினும், இத்தாக்குதலை நம் ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்தனர். இந்நிலையில் உக்ரைன் - ரஷ்யா, ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போர்களில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்து காணப்பட்டுள்ளன. நவீனகால போரில், ட்ரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், நம் நாட்டில் உள்ள சிவில் விமான நிலையங்களில் ட்ரோன் தடுப்புச் சாதனங்களை முதன்முறையாக பொருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், எத்தகைய ட்ரோன் தாக்குதல்களையும் தடுக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் விமான நிலையங்களில் ட்ரோன் தடுப்பு சாதனங்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக டில்லி, மும்பை மட்டுமின்றி சர்வதேச எல்லைகளுக்கு அருகே உள்ள ஸ்ரீநகர், ஜம்மு, பஞ்சாபின் அமிர்தசரஸ் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் நிறைந்த விமான நிலையங்களில் ட்ரோன் தடுப்புச் சாதனங்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. அதன்பின் மற்ற விமான நிலையங்களிலும் இவை படிப்படியாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி