உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெருநாய்களை விரட்டி அடித்த சொட்டு நீலம் கலந்த தண்ணீர்

தெருநாய்களை விரட்டி அடித்த சொட்டு நீலம் கலந்த தண்ணீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தாவணகெரே: கர்நாடக மாநிலம், தாவணகெரே நகரில், சொட்டு நீலம் கலந்த தண்ணீர் பாட்டில்களை வீட்டு வாசலில் வைப்பதால், தெரு நாய்கள் தொல்லை குறைந்துள்ளது. கர்நாடக மாநிலம், தாவணகெரே நகரின், கே.டி.ஜே., நகரில் தெரு நாய்களின் தொல்லையால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. பயனில்லை குழந்தைகள், தெருவில் விளையாட முடியவில்லை. மேலும், வீடுகள் முன் நாய்கள் அசுத்தம் செய்து வந்தன. நடைபயிற்சி செய்யும் மூத்த குடிமக்கள், சிறார்களை நாய்கள் கடித்த சம்பவங்களும் அடிக்கடி நடந்தன. மாநகராட்சிக்கு புகார் அளித்தும் பயன் இல்லை. இதற்கிடையே இப்பகுதி மக்களே, நுாதன வழியை கையாண்டு, நாய்களின் தொந்தரவை கட்டுப்படுத்தியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ஸ்ட்ரீனி என்ற பெண், கே.டி.ஜே., நகரில் வசிக்கிறார். இவரது சொந்த ஊரிலும் தெருநாய்கள் தொல்லை இருந்தது. அப்போது, அவர் துணிகளுக்கு பயன்படுத்தும் சொட்டு நீலத்தை நீரில் கலந்து, பாட்டில்களில் நிரப்பி வீட்டு முன் வைத்தார். அதன்பின் அங்கு நாய்கள் எட்டி பார்க்கவில்லை. நீல நிறம் என்றால், நாய்களுக்கு அலர்ஜி. எனவே, நீல நிற பாட்டில்களை கண்டு பயந்து ஓடின. இதே வழிமுறையை, இங்கும் ஸ்ட்ரீனி கையாண்டார். இது வெற்றி அடைந்து உள்ளது. இதைப் பார்த்து அப்பகுதியில் அனைவரும், பாட்டில்களில் சொட்டு நீலத்தை கலந்து வீட்டு வாசலில் வைத்துள்ளனர். நாய்களின் தொல்லையும் குறைந்துள்ளது. அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், 'எங்கள் வீதியில் அனைவரின் வீட்டு முன்பாகவும், நீல நிற தண்ணீரை பாட்டில்களில் நிரப்பி வைத்துள்ளோம். நாய்கள் வருவதில்லை; நிம்மதியாக இருக்கிறோம். எங்களின் முயற்சி வெற்றி அடைந்துள்ளது' என்றனர். மக்களின் சாமர்த்தியம் கால்நடை துறை அதிகாரி விஸ்வநாத் கூறுகையில், ''அடர்ந்த நீல நிறத்தை கண்டால், நாய்கள் அஞ்சும் என கேள்விப்பட்டிருக்கிறேன். நாயின் தொந்தரவை கட்டுப்படுத்த, வீட்டு முன் நீல நிற பாட்டில்கள் வைத்துள்ளனர். இது என் கவனத்துக்கும் வந்தது, நீல நிறத்தை கண்டு நாய்கள் பயந்திருக்க வேண்டும். ''நீல நிறம் நாய்களின் கண்களை குத்துவது போன்றிருக்கும் என, மக்கள் கூறுகின்றனர். இது, அறிவியல் ரீதியில் நிரூபணமாகவில்லை. ஆயினும், மக்களின் சாமர்த்தியம் ஆச்சரியம் அளிக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Shankar Ganesh
ஆக 19, 2025 09:18

என்னாது? கண்ணாடி காமெடி போல இருக்கு.


Thiagarajan Anandapadmanaban
ஆக 19, 2025 02:19

Now Our Honarable Supreme Court has taken the Case Seriously and passed orders to catch all street dogs and ensure safety of Public especially school going children and elders within a Week Another serious is Stray cattles roaming on the streets causing traffic hazard


சண்முகம்
ஆக 18, 2025 22:23

அம்மோனியாவை ஒரு தட்டில் ஊற்றி வாசலில் வையுங்கள். நாய் நெருங்காது.


Araavamudhan S
ஆக 18, 2025 20:18

தெரு நாய்கள் மிகவும் சாமர்த்தியமாக குட்டி போட்டு வளர்த்து வருகிறது. ஒரு புறம் ஜீவகாருண்யம் மறுபுறம் நாய் கடி பயம். இங்குள்ள நாய்கள் எந்த கலருக்கும் அஞ்சுவதில்லை. ஆனா விலை மட்டுமே உயரம்.


matt raman
ஆக 18, 2025 18:19

Dogs are dichromatic compared to humans who are tri.. only red and green appear as brown. But blue appears normally. Dogs without owners tags should be neutralized. That’s not immoral in this society


Ramesh Sargam
ஆக 18, 2025 13:15

இது நல்ல ஐடியாவா இருக்கே. தெரு நாய் பிரச்சினை உள்ளவர்கள் இதை செய்து நாய்களை விரட்டவேண்டும்.


நாகராஜன்
ஆக 18, 2025 12:23

அந்த நாய்கள் எங்கே போகும்


M Ramachandran
ஆக 18, 2025 11:58

சினிமா கும்பல் கள்ள போராளிகள் போல் யெதற்கும் எதிர்ப்பு கும்பல்கிளம்ப்பிடிச்சே அதையேன் ஊடகங்கள் தெரிவிப்பதில்லை.


சண்முகம்
ஆக 18, 2025 09:47

நீலம் நாய்களை சாந்தப்படுத்தும் நிறம் நாய் பயிற்சியாளர்கள் கூறியது.


raghavan
ஆக 18, 2025 09:16

என் வண்டியே நீல நிறத்தில் தான் உள்ளது. ஆனால் இரவில் சீட்டில் ஏறி கடித்து குதறி உள்ளது. எவனாவது நீல நிறத்தில் விஷ உணவை வைத்து இருப்பான். மற்ற நாய்கள் அதை உணர்ந்து விஷயத்தை பரப்பி இருக்கும் . அதுக்கும் தகவல் பரிமாறும் திறமை உண்டு. நமக்குப் புரியாது.


புதிய வீடியோ