உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதை ஆசாமிகள் அட்டகாசம்; ரோட்டில் காத்திருக்கும் பயணியர்

போதை ஆசாமிகள் அட்டகாசம்; ரோட்டில் காத்திருக்கும் பயணியர்

வால்பாறை : வால்பாறை அடுத்துள்ள நல்லகாத்து எஸ்டேட்டில், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், முடீஸ் - சோலையாறு செல்லும் ரோட்டில் ஆர்ச் அருகே பயணியர் நிழற்கூரை கடந்தாண்டு கட்டப்பட்டது.நிழற்கூரையில், இரவு நேரத்தில் திறந்தவெளி 'பார்' போன்று மாற்றிவிடுகின்றனர். மாலை நேரத்தில் நிழற்கூரையில் அமர்ந்து, மது அருந்தி விட்டு காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர். போதையில் சிலர் பாட்டில்களை உடைத்து வீசுகின்றனர். இதனால், நிழற்கூரையை பயன்படுத்த முடியாமல், திறந்தவெளியில் பல மணி நேரம் காத்திருந்து பயணியர் பஸ்களில் பயணம் செய்யும் நிலை உள்ளது.தொழிலாளர்கள் கூறுகையில், 'பயணியர் நிழற்கூரை முழுவதும் மதுபாட்டில், தண்ணீர் பாட்டில்கள் தான் உள்ளது. உள்ளே செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மாலை நேரத்தில் பயணியர் நிழற்கூரையில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை