உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதை மாத்திரை வழக்கு; நைஜீரியா வாலிபர் கைது

போதை மாத்திரை வழக்கு; நைஜீரியா வாலிபர் கைது

பாலக்காடு; பாலக்காடு அருகே மெத்தாம்பெட்டமின் பறிமுதல் வழக்கில் தொடர்புடைய நைஜீரியா வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், முண்டூர் அருகே கோங்காடு போலீசார் வாகன சோதனையின் போது, 53.950 கிராம் மெத்தாம்பெட்டமின் என்ற போதை மாத்திரையுடன், கோழிக்கோடு மாவட்டம் ஓஞ்சியம் பகுதியை சேர்த்த ஆன்சி, 30, மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நூறாதஸ்னி, 23, முகமது ஸ்வாலிஹ், 29, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். தொடர் விசாரணையில், இவர்களுக்கு போதை மாத்திரை அளித்தது பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்படும் கும்பலில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த வின்சென்ட் பாசெ, 38, என்பது தெரியவந்தது. இதையடுத்து, பெங்களூருக்கு சென்று அவரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், நைஜீரியா வாலிபரை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ