உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.4 கோடி போதைப்பொருள் கடத்தல்: பெங்களூருவில் நைஜீரியர்கள் 3 பேர் கைது

ரூ.4 கோடி போதைப்பொருள் கடத்தல்: பெங்களூருவில் நைஜீரியர்கள் 3 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெங்களூருவில் ரூ.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட நைஜீரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2.8 கிலோ போதைப்பொருட்கள் மற்றும் 400 கிராம் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கர்நாடக மாநிலம் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ராஜனுகுண்டே என்ற பகுதி உள்ளது. இங்கு நைஜீரியர்கள் சிலர் போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் சி.கே. பாபா கூறியதாவது:நம்பகமான உளவுத்துறை தகவல் அடிப்படையில் எங்களது குழு, வெளிநாட்டினரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து, சிலரை அடையாளம் கண்டது. அதன்படி, நைஜீரியர்கள் 3 பேர் மருத்துவ விசாக்களில் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் போதைப்பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டு இங்கு தங்கியிருப்பதை அறிந்து சோதனை நடத்தியதில் அவர்களிடம் இருந்த 2.8 கிலோ போதைப் பொருட்கள் மற்றும் 400 கிராம் உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்துள்ளோம்.இவர்களது கடத்தல் நெட்வொர்க் எங்கிருந்து தொடங்குகிறது என்றும் விசாரணை நடக்கிறது.இவ்வாறு பாபா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sekar ng
ஜூலை 08, 2025 08:55

நைஜீரியர்களை பொது மக்களும் போலீசும் கண்கணிக்க வேண்டும்


Sudha
ஜூலை 07, 2025 22:06

இவர்கள் இந்தியாவில எந்த அடிப்படையில் இருக்கிறார்கள்? யாரிடம் வேலையில் இருக்கிறார்கள்? இந்த விவரங்கள் உள்துறை அமைச்சகத்திடம் இருக்க வேண்டும்


புதிய வீடியோ