உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானாவில் ரூ.12,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: ஐடி நிபுணர் உட்பட 12 பேர் கைது

தெலுங்கானாவில் ரூ.12,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: ஐடி நிபுணர் உட்பட 12 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: தெலுங்கானாவில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் உற்பத்தி கும்பலை சேர்ந்த ஐடி நிபுணர் உட்பட 12 பேர் மஹாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.12,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.தெலுங்கானாவின் சேரமல்லி பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலை என்ற போர்வையில் ரகசியமாக போதை மருந்துகள் உற்பத்தி செய்து, மஹாராஷ்டிராவின் மும்பைக்கு வழங்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, மஹாராஷ்டிராவின் மீரா-பயந்தர், வசாய்-விரார் போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ஒரு மாதமாக கண்காணித்து, 60க்கும் மேற்பட் இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பெரிய போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் 12 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:கைதான 12 பேரில் ஐடி நிபுணர் ஒருவரும் சிக்கினார். அவர் தனது ரசாயன அறிவை தவறாக பயன்படுத்தினார். மேலும் இதில் மீரா சாலையில் கடந்த மாதம் ரூ.24 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் பிடிபட்ட வங்கதேச பெண் ஒருவரும் தொடர்புள்ளவராக அறியப்பட்ட பாத்திமா முராத் ஷேக் என்கிற மொல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் எனப்படும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறோம்.மேலும் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சுமார் 35,000 லிட்டர் ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான மருந்துகள் உள்ளூர் குற்றவாளிகள் மற்றும் முகவர்கள் மூலம் மும்பைக்கு வழங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கும்பலில் வெளி நாட்டவரின் ஈடுபாட்டின் காரணமாக இந்த வழக்கு சர்வதேச அளவிலும் விசாரிக்கப்படுகிறது.இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Tamilan
செப் 06, 2025 21:42

25000 கோடி போதைப்பொருள் கடத்திவந்த அதானி போர்ட்டு என்ன ஆயிற்று


Tamilan
செப் 06, 2025 21:41

வெளிநாடுகளில் இருந்து கடத்திவருவது குறைந்துவிட்டால் அதானி போர்ட்டுகளுக்கு ஏர்போர்ட்டுகளுக்கு வருமானம் குறைந்துவிடும் என்பதால் இப்படி ஒரு நடவடிக்கை


Tamilan
செப் 06, 2025 20:55

மோடி ஆட்சியில் இந்தியா தன்னிறைவு அடைந்து வருகிறது இவர்களுக்கு பிடிக்கவில்லையா .


என்றும் இந்தியன்
செப் 06, 2025 19:56

தெலுங்கானாவில் ரூ.12,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: ஐடி நிபுணர் உட்பட 12 பேர் கைது???OK Very Good???? பிறகு என்ன நடந்தது????வெறும் செய்திக்காக தான் இது. சட்டம் போலீஸ் மிக மிக கேவலமான முறையில் உள்ளது. தவறு கண்டேன் சுட்டேன் இந்த சட்டம் ஒன்று தான் இந்தியாவை காக்கும், இப்போது இருக்கும் சட்டம் பணம் உள்ள குற்றவாளிகளை காப்பாற்ற மட்டும் தான் உள்ளது.


nagendhiran
செப் 06, 2025 19:52

குடும்பத்தோட கொடடூர காட்டிற்கு நாடு கடத்தனும் அவர்களை? என்ன வேலை கணவன்? தந்தை? சகோதரன் செய்யுறான் அவ்வளவு பணம் எப்படி வருகிறது தெரியாம ஒரு குடும்பம் இருக்க வாய்ப்பே இல்லை?


Natarajan Ramanathan
செப் 06, 2025 19:33

இந்தமாதிரி போதைமருந்து கடத்தலில் ஈடுபடுபவர்களை குறைந்தபட்சம் அந்த மதத்தில் இருந்து நீக்குவார்களா?


SULLAN
செப் 06, 2025 20:39

பிடிபட்டவன் பூராம் சனாதன சாக்கடை என்றால் வேறெந்த சாக்கடைக்குள் தஞ்சம் புகுவார்


nagendhiran
செப் 06, 2025 20:52

சுல்லான்? பன்றீஸ்தான் மிச்சமா?


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 06, 2025 19:23

12,000 கோடியா? அப்போ எழுத்தருக்கு, ஏட்டுக்கு, உதவிகாவலருக்கு, தலைமை காவலருக்கு... இப்பிடி எல்லோருக்கும் எம்பூட்டு கிடைக்கும் ஐயோ ஐயோ சொக்கா, போச்சே, போச்சே. தமிழ்நாட்டுல நடந்திருக்கப்படாதா? எல்லாம் போச்சே


Pandi Muni
செப் 06, 2025 18:59

இப்போ மட்டும் என்ன வாழுது? சிக்கின கும்பல் ஓங்கோலுக்கு பக்கத்து ஊர்தான்


Rathna
செப் 06, 2025 18:48

பங்களாதேஷிகளின் மிக பெரிய ஆபத்து இதுதான். உள்நாட்டு அமைதி வழிகளுடன் சேர்ந்து கொண்டு சட்ட விரோத செயல்களில் ஆரம்பித்து விடுவார்கள். இப்போது பங்களாதேஷ் பாக்கிஸ்தான் கூட்டணி வேறு. கேட்கவா வேண்டும்.


ஆரூர் ரங்
செப் 06, 2025 18:41

மாட்டிக்கிட்டது அயலக ஆளும் பெண்ணுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை