உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.350 கோடி போதை பொருள் மிசோரமில் பறிமுதல்

ரூ.350 கோடி போதை பொருள் மிசோரமில் பறிமுதல்

அய்ஸ்வால் : வடகிழக்கு மாநிலமான மிசோரம் தலைநகர் அய்ஸ்வால் பகுதியில் லாரியில் போதை பொருள் கடத்துவதாக மாநில குற்றப்பிரிவு சிறப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அய்ஸ்வாலில், ஜெமாபாக் மற்றும் செலிங் பகுதி இடையே மாடுகளை ஏற்றி சென்ற லாரியை வழிமறித்த போலீசார், அதில் இருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் 128 சோப்பு பெட்டிகளில் கடத்தப்பட்ட 1.652 கிலோ ஹெராயின் மற்றும் 20.304 கிலோ எடையுள்ள மெத்ஆம்பெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் மதிப்பு 350 கோடி ரூபாய். கடத்தலில் ஈடுபட்ட அய்ஸ்வால் பகுதியை சேர்ந்த டிரைவர் லல்தாஜூலாவ், 45, கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ