உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வகுப்பறை சுவர்களில் சாணம் பூச்சு.. டில்லி கல்லூரி முதல்வரின் வினோத செயல்

வகுப்பறை சுவர்களில் சாணம் பூச்சு.. டில்லி கல்லூரி முதல்வரின் வினோத செயல்

புதுடில்லி: டில்லி பல்கலைக்குட்பட்ட கல்லூரியின் வகுப்பறையில் மாட்டு சாணத்தை கல்லூரி முதல்வர் பூசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லி பல்கலைக்குட்பட்ட லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் பிரத்யூஷ் வத்சலா, அவரே தன்னுடைய கைகளால் வகுப்பறைகளில் உள்ள சுவற்றில் மாட்டு சாணத்தை பூசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து கல்லூரி முதல்வர் பிரத்யூஷ் வத்சலா கூறியதாவது: சுவர்களில் சாணம் பூசியது, இந்திய பாரம்பரியத்தை பயன்படுத்தி வெப்ப அழுத்தத்தை கட்டுப்படுத்துவது குறித்து கல்லூரி ஆசிரியர்களுக்கான ஆய்வின் ஒரு பகுதியாகும். தொடர்ந்து அது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு ஒருவாரத்தில் முடிந்து விடும். அதன் பிறகு இது பற்றி விளக்கமாக கூறுகிறேன். ஒரு சுவற்றின் ஒரு பகுதியில் நானே சாணத்தை கைகளால் பூசினேன். இயற்கையான சாணத்தை கையில் தொடுவது எந்த தீங்கையும் கொடுக்காது. சிலர் இதுபற்றி தெரியாமல் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

manituticorin
ஏப் 15, 2025 08:20

வகுப்பறை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.


rengarajan
ஏப் 14, 2025 21:22

Transmission gains through walls due to sun is observed by cow dung as the k value is very high in cow dung, Logic is applied


Ramesh Sargam
ஏப் 14, 2025 20:24

சாணம் பூசினால் குளுமையாக இருக்கும் என்கிற நல்ல எண்ணத்தில் அவர் பூசினார். அவர் நல்ல எண்ணத்தை புரிந்துகொள்ளவேண்டும். தமிழகத்தில், வேங்கைவாசல் என்கிற கிராமத்தில் பொதுமக்கள் தண்ணீர் தொட்டியில் மலத்தை கலந்ததுபோல எதுவும் செய்யவில்லையே.


Krishnamurthy Venkatesan
ஏப் 14, 2025 19:31

மாட்டு சாணத்தால் மெழுகினால் குளிர்ச்சியாக இருக்கும். வெள்ளைக்காரன் சொன்னால்தான் சிலர் நம்புவார்கள்.


தாமரை மலர்கிறது
ஏப் 14, 2025 19:19

கற்காலத்திற்கு ஒருபோதும் போகமுடியாது. இறைநம்பிக்கை வேறு. மூடநம்பிக்கை வேறு. பிஜேபி அரசிடம் நல்ல பெயர் வாங்கி ப்ரோமோஷன் வாங்க, ஒரு சிலர் இந்த மாதிரி வினோத செயல்களில் ஈடுபட்டால், டிமோஷன் தான் கிடைக்கும். உலக அளவில் இந்தியாவை கேலிக்கூத்தாக்க, பிஜேபி ஒருபோதும் ஒத்துக்கொள்ளாது.


TRE
ஏப் 14, 2025 17:17

டெல்லி மக்கள் முட்டாள்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் மின்வெட்டு மற்றும் பள்ளிக்கல்வி கட்டணம் ஆகியவை RSS பிஜேபி டெல்லி அரசு உயர்த்தி இருக்கிறது


Sampath Kumar
ஏப் 14, 2025 16:56

ரோம்ப வெயில் அதான் முத்தி போச்சு போல ஐயோ பாவம்


தமிழன்
ஏப் 14, 2025 16:32

அப்படியே தட்டிலும் வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது


KRISHNAN R
ஏப் 14, 2025 15:41

சிமெண்ட் சுவரில் வேஸ்ட்


KRISHNAN R
ஏப் 14, 2025 15:39

மண் சுவர்,தரைகளிலில்.. சாண்ம் பூசும் வழக்கம் உண்டு. காலத்தில் வழக்கொழிந்து விட்டது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை