உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை நிறுத்தியதாக சீனா டுபாக்கூர்! அப்பட்டமான பொய் என இந்தியா திட்டவட்ட மறுப்பு

ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை நிறுத்தியதாக சீனா டுபாக்கூர்! அப்பட்டமான பொய் என இந்தியா திட்டவட்ட மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், 'இல்லை, நாங்கள் தான் நிறுத்தினோம்' என, சீனா கூறியுள்ளது. இது அப்பட்டமான பொய் என இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஆண்டு ஏப்ரலில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்; இதில் 26 பேர் உயிரிழந்தனர். விசாரணையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யிடம் ஆயுத பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதற்கு பதிலடியாக, மே 7 முதல் 10 வரை பாகிஸ்தானுக்கு எதிராக, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நம் முப்படைகளும் தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன.

நோபல் பரிசு

பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் ராணுவ தளங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றை பிரம்மோஸ் ஏவுகணை மூலம் நம் விமானப் படை தாக்கியது. இதில், பாகிஸ்தானின் நுார் கான், ஷோர்கோட் உள்ளிட்ட முக்கிய விமான தளங்கள் பெரும் சேதமடைந்தன. இதை சமீபத்தில் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டது. இதனால் கடும் சேதத்தை சந்தித்த பாகிஸ்தான், விமானப்படையின் செயல்பாட்டை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. எனவே சண்டையை நிறுத்தும் முடிவுக்கு வந்தனர். இதையடுத்து, மே 10 அன்று, பாகிஸ்தான் ராணுவ இயக்குநர் மூலம் இந்திய ராணுவ இயக்குநரை தொடர்பு கொண்டு, சண்டை நிறுத்தம் கோரினார். இந்தியா தன் இலக்குகளை அடைந்துவிட்ட நிலையில், போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது. இந்த சண்டையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் தலையிட்டு நிறுத்தியதாக கூறி வருகிறார். 'வர்த்தக தடை விதிப்போம்' என இரு நாடுகளிடமும் கூறி சண்டையை நிறுத்தியதாக இதுவரை 70 முறை கூறியுள்ளார். அதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

போர் நிறுத்தம்

ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் தெளிவுப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், சீன தலைநகர் பீஜிங்கில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யீ பங்கேற்று பேசினார். அப்போது, “சர்வதேச அளவில் 2025ல் பல பிரச்னைகள் எழுந்தன. நீடித்த அமைதியை உருவாக்க இந்த பிரச்னைகளை நடுநிலையாக அணுகினோம். “அதன்படி மியான்மர், ஈரான், பாகிஸ்தான்- - இந்தியா இடையிலான பதற்றம், பாலஸ்தீனம் - -இஸ்ரேல் பிரச்னை, கம்போடியா - -தாய்லாந்து மோதல் உள்ளிட்டவற்றில் நாங்கள் மத்தியஸ்தம் செய்தோம்,” என்றார். அவரது கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: ஆப்பரேஷன் சிந்துாரின் போது எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் தரப்பில் இருந்து நம் ராணுவ இயக்குநரை தொடர்பு கொண்டு போர் நிறுத்தம் கோரப்பட்டது. இந்தியா தொடர்பான பிரச்னையில், மூன்றாம் தரப்பு தலையீட்டை அனுமதிக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு எப்போதும் தெளிவாக உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Venugopal S
ஜன 01, 2026 18:32

இனி அடுத்து பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான் எல்லோரும் வரிசையாக வந்து நாங்கள் தான் இந்தியா பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தினோம் என்று சொல்வார்கள் போல் உள்ளது!


ram
ஜன 01, 2026 15:01

ஒருபக்கம் அமெரிக்கா தம்பட்டம் அக்குது.. இப்போ சீனா வேறேயா..


கனவுக்கண்ணன்
ஜன 01, 2026 14:28

இவிங்க சொல்றதெல்லாம் பொய். நான் தான் மோடியின் கனவில் போரை நிறுத்தும்படி சொன்னேன். உடனே போர் நின்னுருச்சு.


duruvasar
ஜன 01, 2026 15:14

இந்த மோதலை நிறுத்த ஐயா ஸ்டாலினின் அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தியதை மறைத்துஅமெரிக்காவும் சீனாவும் கள்ளக்கூட்டணி வைத்து தாங்கள் சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள். ஏற்றுக்கொள்ளமுடியாது. இவர்கள் குறிப்புட்டுள்ள அணைத்து பிரச்சனைகளிலும் நம் முதல்வர் ஐயாவின் மொத்த பங்கீடை தவிர வேறு எதுவுமேயில்லை. இது என் கனவில் வந்தது.


அப்பாவி
ஜன 01, 2026 14:26

அடுத்து புட்டின் அறிக்கைதான் தான் பாக்கி.


Mohan
ஜன 01, 2026 12:47

இங்குள்ள எதிரி கட்சிகளுக்கும் , உண்டியல் குலுக்கிகளுக்கும் தீனி போடுறானுக அமெரிக்காவும் சீனாவும் வேற ஒன்னும் இல்ல ...இத கேட்டுட்டு திங்கு திங்குனு குதிப்பானுக வோட் வாங்குறத சித்தடிக்கணும் அவ்ளோதான் எப்படியாவது காங்கிரஸ் இல்லாட்டி நாம நினைக்குற தாலயத்தி தொடைநடுங்கி இந்தியாவுக்கு PM ஆகணும் அதுக்குதான் இந்த ஈன செயல் ..


Anand
ஜன 01, 2026 10:49

கொஞ்சம் பொறுங்கள், இவையெல்லாவற்றையும் மிஞ்சும் வகையில், நம் மாடல் அரசின் தலைவர் தான் இந்த போரை நிறுத்தினார் என உலகமே வியக்கும் வண்ணம் அறிக்கை வெளிவரக்கூடும்.


Kasimani Baskaran
ஜன 01, 2026 09:30

அமெரிக்காவும் சீனாவும் பாக்கிகளை கொடுத்த ஓட்டை உடைசல் ஆயுதங்களை பல நாடுகள் அடையாளம் கண்டு சீன மற்றும் அமெரிக்க ஆயுதங்களுக்கு மதிப்பு குறையும் என்பதை புரிந்து கொண்டு பொய் சொல்கிறார்கள்.


கண்ணன்
ஜன 01, 2026 07:01

கம்யூக்கள் என்று உண்மை பேசினர்?


Perumal Pillai
ஜன 01, 2026 06:59

பாக்கிஸ்தான் ராணுவம் இந்திய DGMO விடம் சண்டை நிறுத்தம் கோரி பேசிய ஆடியோ வை வெளியிட்டு இந்த கோமாளித்தனத்துக்கு ஒரு முடிவு கட்டலாமே .


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 01, 2026 08:30

வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம்


Barakat Ali
ஜன 01, 2026 12:42

[வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம்] ....... இதுபோன்ற கோடரிக்காம்புகளை எல்லைப்பாதுகாப்புப்படை , ராணுவம் வெப்பநிலை மைனஸில் போய்விட்ட கடுங்குளிரில் 24/7 பாதுகாக்குது .....


Priyan Vadanad
ஜன 01, 2026 05:07

சீனாவுக்கு இத்தனை மாதங்கள் கழித்து தேவையில்லாத பேச்சாக இது இருக்கிறது. தப்பாக irukirathu.