வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எத்தனை செலவானது துஷ்யந்த்?
ஜிந்த்:தேர்தல் பிரசாரத்தின் போது, ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா கார் மீது செங்கல் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஹரியானா சட்டசபைத் தேர்தல் வரும் 5ம் தேதி நடக்கிறது. முன்னாள் எம்.பி., அஜய் சிங் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், துஷ்யந்த் சவுதாலா மற்றும் ஆசாத் ஆகியோர் உச்சனா தொகுதியில் நேற்று இணைந்து பிரசாரம் செய்தனர்.அப்போது, சவுதாலா கார் மீது செங்கல் வீசப்பட்டது. காரின் கீறலும் பின்பக்க கண்ணாடியும் உடைந்தது. அப்போது காருக்குள் யாரும் இல்லை என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால், பிரசார கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.உச்சனாவில் வசிக்கும் முதியவருக்கும் துஷ்யந்த் சவுதாலாவுக்கும் நேற்று முன் தினம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த முதியவரிடம் விசாரித்து வருகின்றனர்.
எத்தனை செலவானது துஷ்யந்த்?