உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாலை பயணத்தால் விபரீதம்; டிரக் மீது பொலிரோ மோதிய விபத்தில் 9 பேர் பலி

அதிகாலை பயணத்தால் விபரீதம்; டிரக் மீது பொலிரோ மோதிய விபத்தில் 9 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கம் அருகே அதிகாலையில் டிரக் மீது பொலிரோ ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜார்க்கண்ட் எல்லையில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தின் புருலியா மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ஜார்க்கண்டின் நிம்தி பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, பொலிரோ ஜீப்பில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, நம்சோல் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், வேகமாக வந்த டிரக் மீது பொலிரோ மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஜீப்பில் பயணித்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து பற்றி விசாரித்து வருகின்றனர். தூக்க கலக்கத்தில் சிறு தவறு நிகழ்ந்தாலும் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதால், இரவு நேரம், அதிகாலை நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அசோகன்
ஜூன் 20, 2025 13:11

தவறான செய்தியாக படுகிறது...... இந்த தேசிய நெடுஞ்சாலை 4 lane கொண்டது இதில் டிரக் எங்கே எதிரே வந்தது........ உண்மையான காரணம் டிரக் ரிப்பேர் ஆகிவிட்டால் அப்படியே செடி கொடிகளை செருக்கிவிட்டு சென்றுவிடுகிறார்கள்..... இரவில் எதிர் lane வண்டியின் வெளிச்சத்தில் நிற்கும் வண்டி சுத்தமாக தெரியாது.... அதனால் தான் அவ்வளவு வேகத்தில் மோதி இறக்கிறார்கள்....... இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்


புதிய வீடியோ