உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஸ்ரீநகர்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கத்திற்கு உள்ளாகும் நாடுகளில் ஒன்று. இந்திய மற்றும் யூரேசிய புவியியல் தட்டுகளின் மோதும் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது. குறிப்பாக ஹிந்துகுஷ் மலைத்தொடர், தொடர்ச்சியாக நிலநடுக்கங்களுக்கு உட்படுகிறது. ஆப்கானிஸ்தானில், நேற்று மதியம் 5.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான்- - தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியை மையமாக வைத்து, 130 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற் பட்டதாக அந்நாட்டு புவியியல் துறை தெரிவித்தது.இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர், பூஞ்ச் மற்றும் டில்லியிலும் உணரப்பட்டது. ஸ்ரீநகரில் வீடுகளின் கூரைகள் மீது பொருத்தப்பட்ட மின்விசிறிகள், மேஜை, நாற்காலிகள் பலமாக ஆடின. இதைக் கண்டு பயந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதேபோல, பாகிஸ்தானிலும் இந்த வாரத்தில் மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி