உத்தரகன்னடாவில் நில அதிர்வால் மக்கள் பீதி
உத்தரகன்னடா: உத்தரகன்னடாவின், பல்வேறு பகுதிகளில் நேற்று காலை நில அதிர்வு ஏற்பட்டது. மக்கள் அலறி கொண்டு, வெளியே ஓடி வந்தனர்.உத்தரகன்னடா, சிர்சி தாலுகாவின், மத்திகட்டா, சம்பகன்டா, தேவிமனே, எல்லாபுரா தாலுகாவின் சவுவத்தி, சித்தாபுரா தாலுகாவின், கானசூரு, தட்டிக்கை, மாவினகுன்டி, ஹலகேரி, குமட்டா உட்பட, பல்வேறு கிராமங்களில் நேற்று அதிகாலை 5:00 மணியளவில், பூமிக்குள் இருந்து வினோதமான சத்தம் கேட்டது. நில அதிர்வு அனுபவம் ஏற்பட்டது. மக்கள் பயந்து கொண்டு, வெளியே ஓடி வந்தனர்.காலை 11:42 மணிக்கு, சில வினாடிகள் இது போன்ற சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்க கடலில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் உத்தரகன்னடா பகுதிகளில் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.