நர்சிங் மாணவி கொலை வழக்கு அரசு மீது ஈஸ்வரப்பா பாய்ச்சல்
ஹாவேரி : ''நர்சிங் மாணவி சுவாதி கொலை கண்டிக்கத்தக்கது. இதுபோன்று இளம் ஹிந்து பெண்களை கொல்வோரை சுட்டுக் கொல்ல சட்டம் அமல்படுத்த வேண்டும்,'' என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.ஹாவேரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:சுவாதியின் தாய், அங்கன்வாடியில் சமைத்து வாழ்ந்து வருகிறார். அவர்களின் வறுமையை கேட்டபோது, கண்ணீர் விட்டேன். நர்சிங் மாணவி சுவாதி கொலை கண்டிக்கத்தக்கது. இதுபோன்று இளம் ஹிந்து பெண்களை கொல்வோரை சுட்டுக் கொல்ல சட்டம் அமல்படுத்த வேண்டும்.சுவாதி கொலை செய்யப்பட்டு, 16 நாட்கள் ஆன பின்னரும், பொறுப்பான அமைச்சர், அவர்களின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறவில்லை. இதுவே முஸ்லிம் பெண்ணாக இருந்தால், அரசாங்கமே அவர்களின் வீட்டில் இருந்திருக்கும்.முஸ்லிம்களை கவரும் வகையில் இந்த அரசு செயல்படுகிறது. அவர்களை, அரசு அடிமைப்படுத்துகிறது. இவ்விஷயம் தொடர்பாக, மாவட்ட கலெக்டரிடம் தாசில்தார் இன்னும் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. இதுபோன்ற பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.