உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சொல்வது எளிது: செய்வது கடினம்: காங்கிரசை சாடுகிறார் பிரதமர் மோடி

சொல்வது எளிது: செய்வது கடினம்: காங்கிரசை சாடுகிறார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால், அதனை முறையாக நிறைவேற்றுவது என்பது கடினம் அல்லது சாத்தியம் இல்லாதது என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளது'', என பிரதமர் மோடி கூறியுள்ளார்.கர்நாடகாவில் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிப்படி , 'சக்தி' திட்டத்தை முதலில் முதல்வர் சித்தராமையா செயல்படுத்தினார். அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக கர்நாடகா முழுதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இதனால், குஷியடைந்த பெண்கள், குடும்பத்துடன் சுற்றுலா, தீர்த்த யாத்திரை செல்கின்றனர். திட்டங்கள் வெற்றி அடைந்தாலும், கட்சியில் அபஸ்வரங்களும் எழுந்தன. இதனிடையே, அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் சிவகுமார், 'டிக்கெட் எடுக்க எங்களுக்கு பொருளாதார வசதி உள்ளது. இலவச டிக்கெட் வேண்டாம்' என சில மாணவியர் இ - மெயில் மற்றும் 'எக்ஸ்' வலைதளம் வழியாக கருத்து தெரிவிக்கின்றனர். எனவே சக்தி திட்டத்தை மறு பரிசீலனை செய்வது குறித்து, முதல்வருடன் ஆலோசிக்கப்படும்' என்றார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்குறுதி அளிப்பதற்கு முன்னர் நன்கு பரிசீலனை செய்ய வேண்டும் என மாநில காங்கிரசாருக்கு, அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டித்தார்.இந்நிலையில், 'எக்ஸ்' சமூக வலைதளம் வாயிலாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது: உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால், அதனை முறையாக நிறைவேற்றுவது என்பது கடினம் அல்லது சாத்தியம் இல்லாதது என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளது. ஒவ்வொரு பிரசாரத்தின் போதும், அவர்கள் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால், அது நிறைவேற்ற முடியாதது என்பதை அறிவார்கள். தற்போது மக்கள் முன் மோசமான முறையில் அக்கட்சியினர் அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா என காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் வளர்ச்சிப்பாதை மற்றும் நிதி நிலைமை மோசமான நிலையில் உள்ளது. தங்களின் உத்தரவாதம் என காங்கிரசார் கூறும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் கிடக்கின்றன. இத்தகைய அரசியலால் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்த வாக்குறுதிகளின் பலன்கள் மறுக்கப்படுவது மட்டும் அல்லாமல், தற்போதுள்ள திட்டங்களையும் நீர்த்துப்போகச்செய்வதையும் மக்கள் பார்க்கிறார்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் உட்கட்சி பூசலில் ஈடுபடுவதுடன், மாநிலத்தின் வளர்ச்சி பற்றி கவலைப்படாமல் கொள்ளையடிப்பதில் மும்முரமாக உள்ளது. தற்போது திட்டங்களை திரும்ப பெறுவதில் முனைப்பு காட்டுகின்றனர். ஹிமாச்சல பிரதேசத்தில், அரசு ஊழியர்களின் சம்பளம் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. தெலுங்கானாவில் , அக்கட்சி அளித்த வாக்குறுதிப்படி கடன் தள்ளுபடிக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.இதற்கு முன்பும், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் அளித்த வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சி செய்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை. இதுபோன்று காங்கிரசின் பணிக்கு ஏராளமான சான்று உள்ளன. பொய் வாக்குறுதி அளிக்கும் காங்கிரசின் கலாசாரம் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சமீபத்தில் அக்கட்சியின் பொய் வாக்குறுதியை நிராகரித்த ஹரியானா மக்கள், வளர்ச்சி சார்ந்த நிலையான அரசை ஏற்படுத்தியதை பார்த்தோம்.காங்கிரசுக்கான ஓட்டு என்பது மோசமான நிர்வாகம், மோசமான பொருளாதாரத்திற்கான ஓட்டு என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர். இந்திய மக்கள் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் விரும்புகின்றனர். இவ்வாறு அந்த பதிவுகளில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

spr
நவ 02, 2024 20:51

மூன்று முறை பிரதமராக இருந்து, குற்றம் செய்தவர் பாஜகவில் இணைந்தால் அவர் மீது விசாரணை இல்லையென்று சொன்ன போதும், அது இயல்பென்றே கொண்டாலும் கூட இன்னமும் பிற கட்சிக் குற்றவாளிகள் தப்பிக்க உதவும் சட்ட ஓட்டைகளை விலக்க இயலாத நிலை, குற்றவாளிகள் என்றறியப்பட்டும் தண்டிக்க தக்க சாட்சியங்களை அளிக்காத அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாத கையாலாகாத்தனம், இதையெல்லாம் செய்வேனென்று கூறிய மோடி இப்படிச் சொன்னால் அது நிச்சயம் சரியாகத்தான் இருக்கும்


venugopal s
நவ 02, 2024 11:17

இதைப் புரிந்து கொள்ள இவருக்கு பத்து வருடங்கள் தேவைப்பட்டதா?


N Sasikumar Yadhav
நவ 02, 2024 11:14

திமுகடிமைகளுக்கு மோடிஜி சொல்வது ஒன்றுக்கூட மூளையில் பதியாது மூளை இருக்கவேண்டிய இடத்தில் திமுக நிர்வாகிகள் தயாரிக்கும் சாராயம் நிரம்பி இருக்கிறது.


நாஞ்சில் செல்லப்பா
நவ 02, 2024 09:43

தீபாவளியை முன்னிட்டு பாரதத்திற்கு சிறப்பு பரிசாக 102 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கிகளில் இருந்து மீட்டு கொண்டு வந்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு. உங்களுக்கு இது ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்.. இத்தாலி மாஃபியா குடும்பத்தின் கொள்ளைகார குடும்பத்தின் அவல ஆட்சியினால் 405 டன் தங்கம் இங்கிலாந்து வங்கியில் அடகு வைக்கப்பட்டது. அடுத்த மாதம் சம்பளத்தை கூட அரசாங்க பணியாளர்களுக்கு தர முடியாத நிலைக்கு பாரதத்தின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளிய காங்கிரஸ் அரசு இங்கிலாந்து வங்கியிலும் ஸ்விசர்லாந்து வங்கியிலும் நமது தங்கத்தை அடமானம் வைத்த அவலத்தை பலர் மறந்திருக்கலாம். அவ்வாறு அடகு வைக்கப்பட்ட தங்கத்தில் பாரத பிரதமர் மோடி தலைமையிலான அரசு இதுவரை 214 டன் தங்கத்தை மீட்டு பாரதத்திற்கு கொண்டு வந்தது


S S
நவ 02, 2024 15:35

சும்மா அடித்து விடகூடாது. என்ன ஆதாரம்? 2008 லே உலகமே பொருளதார மந்த நிலையிலே இருந்த போது இந்தியாவை திறம்பட நிர்வகித்தவர் மன்மோகன் சிங். அப்படி இருக்கும் போது காங்கிரஸ் தங்கத்தை அடகு வைத்தது என்று கூறுவது அப்பட்டமான பொய்


N.Purushothaman
நவ 02, 2024 18:55

எஸ் எஸ் ...நரசிம்ம ராவ் காலத்தில் அது நடத்தப்பட்டது .....அப்போது இந்தியா தங்கத்தை அடமானம் வைத்து பணம் பெற்று நாட்டை நிர்வகித்தது ...அப்போது வைக்கப்பட்ட தங்கம் தற்போது அந்நிய செலாவணி முன் எப்போதும் இல்லாத வகையில் கையிருப்பில் உள்ளதால் ரிசர்வ் வங்கி அதை இங்கிலாந்தில் இருந்து சிறப்பு ஆப்பரேஷன் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது ....


N.Purushothaman
நவ 02, 2024 09:36

ரஷியா -உக்ரைன் போரினால் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பொருளாதார தடையை தனக்கு சாதகமா பயன்படுத்தி கச்சா எண்ணையை தள்ளுபடி விலையில் வாங்கி அதையே சுத்திகரித்து உயர் தர எரிபொருளா மாற்றி எந்த நாடுகள் ரஷ்யாவிற்கு தடை விதித்தனரோ அந்த நாடுகளுக்கே அதையே ஏற்றுமதி செய்து இந்திய பொருளாதாரத்தை வலுவாக்கி கொண்டு இருக்கும் மோதி அவர்கள் தேவையா அல்லது சீனாவுடன் கட்சிக்காக ரகசிய ஒப்பந்தம் போட்ட காங்கிரஸ் மற்றும் அவற்றின் சில்லறை கட்சிகளின் ஆட்சி தேவையா ? ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் ஏன் ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகள் வரிசையாக இந்தியாவிற்கு வருகின்றனர் என்பது இப்போதாவது திருட்டு திராவிடனுக்கு புரியுமா ? ஏன்னா எரிபொருளின் அவசியம் அவர்களுக்கு இந்த குளிர் காலங்களில் பல மடங்கு நுகர்வு அதிகரிக்கும் ....


N.Purushothaman
நவ 02, 2024 09:27

போதைக்கு அடிமையான மற்றும் போதை மருந்து கடத்தி அதை உட்கொள்ளும் திருட்டு திராவிடன் இன்னமும் நீங்க பதினைந்து லட்சம் கொடுக்கறீங்கன்னு சொல்லாததை சொன்னதா நினைச்சி ஏக்கத்துல இருக்கான்...என்ன பன்றது ? கட்சி தலைமை எப்படியோ அப்படிதானே அவனுங்க கட்சிக்காரனுங்களும் இருப்பானுங்க .... ....


Rajarajan
நவ 02, 2024 08:47

மத்திய அரசு ஒவ்வொரு பொதுத்துறை / அரசு துறை நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கையை தனி தனியாக வெளியிட்டால் உண்மை புரியும். சில துறைகளை தவிர, மற்ற அனைத்துமே நஷ்டத்தில் இயங்குவது கண்கூடு. இதை கண்டுபிடிக்க தனி அறிவோ, அறிவாளியோ தேவையே இல்லை. அரசு வெளியிடும் துறை ரீதியான நிதிநிலை அறிக்கை, அரசின் வாரா கடன், நடப்பாண்டின் மொத்த வருவாய் பற்றாக்குறை, கடனுக்கு செலுத்தும் வட்டி, வளர்சசி திட்டங்களுக்கான பற்றாக்குறை ஒதுக்கீடு, வாங்கும் கூடுதல் கடன், ஆகியவை தெளிவுபடுத்தும். ஆண்டு நிதிநிலை அறிக்கை மேக்ரோவாக தரப்படுகிறது. மாறாக மைக்ரோவாக தந்ததால் உண்மை புரியும். ஒரு சில துறைகளின் லாபத்துடன், ஒட்டுமொத்தமாக சேர்த்து தருவதால், தனி தனி துறைகளின் நஷ்டம் தெரிவதில்லை. சந்தேகமிருப்பின் இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் அரசு தொலைபேசி நிறுவன முன்னாள் நிதிநிலை நஷ்டம், அதற்கு ஒiதுக்கிய பல ஆயிரம் கோடி ஆகியவை தேவையில்லை என்பதால் தான், தனியாருக்கு கொடுக்கப்பட்டது என்பது புரியும் . தற்போது பாகிஸ்தானில் ஏர்லைன்ஸ் இதே நிலைமை தான். அதுசரி, அனைத்தும் சரியாக இருப்பின், பஞ்சபடி ஏன் இன்னும் வழக்கில் உள்ளது ? அரசியல் பற்று வேறு, நிர்வாக பற்று வேறு.


Raghunathan Nagarajan Ragu Naga
நவ 02, 2024 08:25

நிதி ஆதாரத்தை, அரசு வருமானத்தை ஏற்படுத்தி பின்பு இலவசங்களை அமல் படுத்தவேண்டும். முக்கியமாக இலவசங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.


GMM
நவ 02, 2024 07:58

ஆண்டு வரவு செலவு தாக்கலின் போது தான் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். அப்போது தான் நிதியின் நிலை தெரியும். சொல்வது, செய்வது எளிதாக இருந்தாலும், பட்ஜெட் பின் தான் நிதி கொள்கை எடுக்க முடியும். உதாரணம் - ஆட்சிக்கு வந்தால், பஸ் கட்டணம் குறைப்போம். தேர்வு செய்யும் முன், கட்சிகள் வாக்கு கவர மாய நிதி கொள்கை எடுக்க முடியாது. தேர்தல் ஆணையம் , வாக்காளரை ஏமாற்றும் செயல். இதனை தடை செய்ய முடியும்.


முருகன்
நவ 02, 2024 07:41

அதனால் தான் மக்களுக்கு ஏதும் செய்யாமல் இருக்கிறோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை