உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.33 லட்சம் பறிமுதல் பெரிய விஷயம் அல்ல; பூபேஷ் பாகல்

அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.33 லட்சம் பறிமுதல் பெரிய விஷயம் அல்ல; பூபேஷ் பாகல்

ராய்ப்பூர்: எனது வீட்டில் ரெய்டு மூலம் ரூ. 33 லட்சம் கைப்பற்றப்பட்டது பெரிய விஷயம் அல்ல என்று சத்தீஸ்கர் மாஜி முதல்வர் பூபேஷ் பாகல் கூறி உள்ளார்.சத்தீஸ்கரில் 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது முதல்வராக பூபேஷ் பாகல் இருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j4z3zzd3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது ஆட்சியில், மதுபான கொள்கை ஊழல் காரணமாக ரூ.2100 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சத்தீஸ்கர் மாஜி முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகல் வீட்டில் இன்று (மார்ச் 10) காலை முதல் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கினர். பல மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், ரூ.33 லட்சம் கைப்பற்றப்பட்டது.மேலும், சோதனைனை முடித்துக் கொண்டு அதிகாரிகள் காரில் புறப்பட்டுச் சென்றனர். வழியில் இந்த காரை மடக்கிய சிலர், அதன் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்நிலையில், அமலாக்கத்துறையின் சோதனை குறித்து பூபேஷ் பாகல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது வீட்டில் ரூ.33 லட்சம் கைப்பற்றப்பட்டது பெரிய விஷயம் அல்ல என்று கூறி இருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது; அமலாக்கத்துறை சோதனை நடத்த வந்தபோது நான் செய்தித்தாள் படித்தபடியே ஒரு கோப்பையில் தேநீர் அருந்திக் கொண்டு இருந்தேன். அவர்களை வரவேற்று, உங்களுக்காக (அமலாக்கத்துறை) தான் பல மாதங்களாக காத்திருந்தேன் என்றும் சொன்னேன்.என் வீட்டில் மனைவி, மூன்று மகள்கள், மகன், மருமகள்கள், பேரன்கள் மற்றும் பேத்திகளும் இங்கு வசிக்கிறார்கள். நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் குடும்பத்தில் நாங்கள் 140 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறோம்.சோதனையில் ரூ.32-33 லட்சம் கண்டுபிடித்துள்ளனர். அது ஒரு பெரிய விஷயம் அல்ல. காரணம் நாங்கள் பெரிய குடும்பம். 140 ஏக்கர் விவசாயம், மற்ற வழிகளில் எங்களுக்கு வருமானம் வருகிறது. அதற்கான ஆவணங்களை நாங்கள் அளிப்போம்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

dhanaraju
மார் 13, 2025 13:47

சில்லறை அப்பா சில்லறை


ديفيد رافائيل
மார் 11, 2025 10:51

என்ன சொல்றது 100 crore கொள்ளையடிச்சவனுக்கெல்லாம் 33 lakhs ஒரு விஷயமே இல்லை தான்.


Ravi Shankar
மார் 11, 2025 08:07

கொஞ்சம் தின்னாலும் அதிகம் தின்னாலும் _ _ தான்... நாற்றம் நாற்றம் தான்....


D.Ambujavalli
மார் 11, 2025 06:16

இங்கே அமலாக்கத்துறையினர் மயக்கம் போடும் அளவு, counting machine களே பழுதாகுமளவு கோடிகள் கிடைக்கும். அதனுடன் ஒப்பிட்டால் வெறும் 33 லட்சம் பொரி, கடலை போலத்தானே


பேசும் தமிழன்
மார் 11, 2025 00:37

ஆமாம்.... காங்கிரஸ் கட்சி ஆட்கள் ஊழல் செய்து சேர்த்து வைத்து இருப்பதில் இது ஒன்றும் பெரிய தொகை அல்ல..... அந்த உண்மையை ஒப்புக் கொள்ளவும் பெரிய மனசு வேணும் !!!


naranam
மார் 10, 2025 23:48

காங்கிரஸ் காரனுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா..


B MAADHAVAN
மார் 10, 2025 22:59

ரெய்டு வரும் என்று ஏற்கெனவே எதிர்பார்த்தேன் என்று தைரியமாக சொல்பவர், முன்கூட்டியே எல்லாவற்றையும் மறைத்து வைத்திருக்கக் கூடும். அப்படி இருந்தே இத்தனை லட்சம் கிடைத்துள்ளது எனில், எதிர்பார்க்காத சமயம் போயிருந்தால் எவ்வளவு கிடைத்திருக்கும்.. கான் கிராஸ் காரர்கள் பெரும்பாலோனோர் பெரிய ஊழல் பெருச்சாளிகள்...


மதிவதனன்
மார் 10, 2025 22:55

ஆட்சி மாறி காட்சிகள் மாறும்போது பீசப்பி ஆட்கள் வீட்டில் எவ்வளவு அள்ளுவார்களோ, இங்கே ஒருத்தர் பாவ யாத்திரை என்று சொல்லி சென்று வசூல் செய்து சேர்த்த தொகை 100 கோடி க்கு மேல் இருக்கும் என்று சொல்லுகிறார்கள் அவர் கதி அதோ கதி தான்


தாமரை மலர்கிறது
மார் 10, 2025 22:47

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். இப்ப முப்பத்திமூன்று லட்சம், இது முதல் ரைடு. இனி அடுத்து அடுத்து வரும். அப்போது முப்பத்திமூன்று கோடி மாட்டும். பலநாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்,


Columbus
மார் 10, 2025 22:25

After all it is not hard earned money. Loose change


முக்கிய வீடியோ