உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சொகுசு கப்பலில் சோதனை ஈ.டி., அதிகாரிகள் மீது தாக்குதல்

சொகுசு கப்பலில் சோதனை ஈ.டி., அதிகாரிகள் மீது தாக்குதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பணஜி: கோவா கடற்கரை அருகே, 'ப்ரைடு' என்ற சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. இக்கப்பலின் இயக்குனர் அசோக் வாடியா மீது, பண பரிமாற்ற மோசடி புகார் எழுந்த நிலையில், அது குறித்து சோதனை நடத்த அமலாக்கத்துறை உதவி இயக்குனர் சென்ன கேசவ ராவ் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 12ம் தேதி சென்றனர்.சொகுசு கப்பலின் உள்ளே சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளை, கப்பல் இயக்குனர் அசோக் வாடியா உத்தரவின்படி கப்பல் ஊழியர்கள் கோபால் ராம்நாத் நாயக், ஆரத்தி ராஜா உள்ளிட்ட சிலர் இணைந்து தாக்கினர். அதன்பின் அங்குள்ள அறையில் அடைத்து வைத்தும் சித்ரவதை செய்தனர்.இதற்கிடையே தகவலறிந்து வந்த போலீசார், கப்பல் ஊழியர்களின் பிடியில் இருந்த அமலாக்கத்துறை அதிகாரிகளை பத்திரமாக மீட்டனர். சொகுசு கப்பலில் நடத்திய சோதனையின்போது கிடைத்த ஆதாரங்களை அழிக்கும் நோக்கில், தங்கள் மீது கப்பல் இயக்குனர் மற்றும் ஊழியர்கள் தங்களை தாக்கியதாக, பாதிக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

வைகுண்டேஸ்வரன்
டிச 15, 2024 11:39

யாரு தங்க மூடி? செ பா விஷயத்தில் மூக்குடைப்பட்டு கேவலமாக நிற்பது யார்? E D யும் ஒன்றிய அரசும் தான். 9 வருடங்கள் முன்னாடி நடந்த விஷயம். கேஸ் போடவே 8 வருஷம் ஆயிடுச்சு. மேலும் 471 நாட்கள் தங்களின் சிறையில் வைத்திருந்த போதும் கூட ஒரு குற்றப் பத்திரிகை தயாரிக்க துப்பில்லை. சாட்சிகளுக்கு செ பா அழுத்தம் குடுப்பாராம். ஏன்? அந்த சாட்சிகளின் statements இன்னும் எடுக்கவில்லையா?? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இதில் யாரு நாத்தமா நாறுவது?


ஆரூர் ரங்
டிச 15, 2024 13:59

அடிமடை. செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை அளித்து ஒரு மாதமாகியும் நீர் விழிக்க வில்லை. ஆழ்ந்த உறக்கமா?


veeramani
டிச 15, 2024 10:11

மய்ய அரசின் ஊழியன் கருத்து.. மய்ய அரசின் போதை தடுப்பு, ஈ டீ, சி பி ஐ போன்ற துறைகளில் வேலையை செய்யும்போது மய்ய அரசின் ஊழியர்களுக்கு உயிர் பாதுகாப்பே இல்லை. எந்த ஒரு மணிலா அரசின் காவலரும் பாதுகாப்பது கொடுப்பதும் இல்லை. அப்படியே இருந்தாலும் கடனுக்கு வருகிறார்கள். மய்ய அரசின் ஊழியர்களும் மனிதர்கள்தான். அவர்களின் கடமையை செய்ய எவரும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. எனவே மய்ய அரசு தனியாக மய்ய பாதுகாப்பது காவலர் படை ஒன்றை நிறுவவேண்டும். இவர்களுக்கு கண்டதும் சுட அனுமதிகொடுக்கவேண்டும்


GMM
டிச 15, 2024 09:04

மத்திய போலீஸ் பாதுகாப்புடன் மட்டும் தான் விசாரணை அமைப்புகள் சோதனையிட செல்ல வேண்டும். மோசடிக்கு ஆதாரம் மோசடியாளரிடம் தான் இருக்கும். வழக்கில் அரசு மோசடியை நிரூபிப்பது கடினம் . ஆனால், நிரூபிக்க சொல்லி வாதிடுவர். குற்றவாளிக்கு ஊக்கம் தரும். ஆகவே தாக்குவர் .? போலிஸ் விசாரணை திசை திரும்பும். மத்திய படை தேவை.


நிக்கோல்தாம்சன்
டிச 15, 2024 09:00

சினிமாவில் பார்ப்பது போன்று உள்ளது


வைகுண்டேஸ்வரன்
டிச 15, 2024 08:58

பழைய பேப்பர் தானே வேணும் எடுத்துண்டு போங்க ன்னு இ டி ஆளுங்களை விட்டிருக்கலாம். அல்லது அசோக் வாடியா பாஜக விற்கு எலெக்டோரல் பாண்டில் சில கோடிகள் போடணும் அல்லது பாஜக வில் சேரணும். அஜித் பவார், சந்திரபாபு நாயுடு மாதிரி free யா இருக்கலாம்.


திகழும் ஓவியன், mumbai
டிச 15, 2024 09:44

எப்பிடி உங்க தங்க மூடி, செ பா மாதிரியா? இங்கயே நாத்தம் தாங்கல வந்துட்டான் கருத்து போட...


D.Ambujavalli
டிச 15, 2024 06:09

பெரிய, மிகப்பெரிய இடங்களில் கைவைக்க அமலாக்கம், வருமான வரி எல்லாருமே பயப்பட வேண்டும் தப்பித்தவறித் துணிந்து ரெய்டு என்று வந்தால் இதுதான் கதி என்று எச்சரிக்கை விடுகிறார்களோ ? உயிருக்குத் துணிந்து இனி யார் முன்வருவார்கள்? அராஜகத்தின் உச்சம்


J.V. Iyer
டிச 15, 2024 05:29

இந்த ED ஆரம்பத்தில் நன்றாகத்தான் செயல்படுகிறது. பிறகுதான் சொதப்பி நீதிமன்றங்களில் குற்றம் பைல் செய்யாமல் எல்லோரையும் பெயிலில் எல்லோரையும் வெளியே விடுகிறார்கள்.


சம்பா
டிச 15, 2024 04:14

சிக்குவது (அப்பாவி ) பாலாஜி மட்டும் தான?


Sudarsan Ragavendran
டிச 15, 2024 08:51

திருத்தம் அப்பவாவி அல்ல அடப்பாவி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை