உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டாஸ்மாக் ஊழலில் முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறது ஈ.டி.,

டாஸ்மாக் ஊழலில் முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறது ஈ.டி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டாஸ்மாக் ஊழலில் பெறப்பட்ட லஞ்ச பணம், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யப்பட்ட மற்றும் டாஸ்மாக் கணினியில் சரக்கு கையிருப்பு தொடர்பான தரவுகள் திருத்தப்பட்டது குறித்து கிடைத்துள்ள தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. டாஸ்மாக் தலைமையகம் மற்றும் அதன் நிர்வாக இயுக்குனர் வீடு உட்பட பல முக்கிய இடங்களில் சோதனைகள் நடந்தன.அப்போது, நிர்வாக இயக்குனரின் வாட்ஸாப் தகவல் பரிமாற்றங்களின் பிரதிகளை, அமலாக்கத்துறை சாலையில் கண்டெடுத்தன.இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணை மற்றும் சோதனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விசாரணை அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதன் விபரம்:டாஸ்மாக் ஊழலில் கிடைத்த லஞ்ச பணம் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்களை கைப்பற்றி உள்ளோம்.மேலும், டாஸ்மாக்கில் உள்ள கணினியில் உள்ள சரக்கு கையிருப்பு தகவல்கள் முறைகேடாக திருத்தப்பட்டுள்ளன. சில மதுபான அதிபர்களின் லாபத்துக்காக அந்த நிறுவனங்களுக்கு மட்டும் அதிக அளவிலான ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.இதற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளோம். உச்ச நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை நடக்கும்போது அவற்றை சமர்ப்பிக்க உள்ளோம்.இந்த பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட சில முக்கிய நபர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய உள்ளோம். டாஸ்மாக் நிறுவனத்தின் உயர் அதிகாரிக்கும் சில இடைத்தரகர்களுக்கும் நடந்த தகவல் பரிமாற்றங்கள் சிக்கியுள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை தொடரும். இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

spr
மே 24, 2025 19:06

இப்படியே அமலாக்கத்துறை தொடருமானால், இனி மேல் குற்றம் செய்தவர்களைக் குறித்து விசாரணையே செய்யக்கூடாது என்று உத்தரவு போட்டாலும் போடலாம். குற்றம் செய்வதற்கு என்று அனுமதி முறை கூட உருவாக்கப்படலாம் இந்த நாட்டில்தான் மனுநீதிச் சோழன் ஆண்டதாக சொல்லப்படுகிறது


Balaji Radhakrishnan
மே 24, 2025 16:41

இது நாட்டுக்கு நல்லதல்ல.


ஆரூர் ரங்
மே 24, 2025 15:01

மத்திய அரசின் மதுரை அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்குள் தமிழக போலீஸ் ரெய்டு நடத்தி ( வழக்குக்கு சம்பந்தமில்லாத?)ஏராளமான ரகசிய ஆவணங்களை கைப்பற்றியபோது கூட்டாட்சித் தத்துவம் பற்றி நீதிமன்றம் கவலைப்பட்டதா? மத்திய Ministry of Corporate Affairs இல் பதியப்பட்ட கார்பரேட் வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் மத்திய அரசு விசாரணை தவறு என்பதை ஏற்க முடியாது. அதில் எப்படி கூட்டாட்சித் தத்துவம் திடீரென நுழைந்தது? உச்ச நீதிமன்றம் பதிலளிக்க வேண்டும்.


Rengaraj
மே 24, 2025 14:11

முக்கிய ஆவணங்களை ஈ.டி இதுநாள் வரை சமர்ப்பிக்கவில்லையா. ? ஏன் ? வழக்கு எப்படி செல்கிறதோ அதற்கேற்றபடி ஆவணங்களை கொஞ்சம் கொஞ்சமாக தருவார்களா ?? விசாரணை செய்யும்போது ஆவணங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் யாரை நம்பப்போகிறது ? மாநில அரசையா ? அல்லது மத்திய அரசையா ? மாநில அரசின் சார்பில் வாதிடுபவர்கள் ஊழலே நடக்கவில்லை என்று சொல்வார்களா ? அல்லது நடந்துள்ளது , ஆனால் எங்கள் பிரச்சினை , நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், என்று சொல்வார்களா ? எது அப்படியாயினும் அரசுக்கு வரவேண்டிய தொகை ஒரு ருபாய் என்றாலும் அதை அரசுக்கு வரவிடாமல் செய்தவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். ஊழல் செய்த அதிகாரிகள் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும்.


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
மே 24, 2025 10:42

ஊடகங்களுக்கு ஏன் இந்த வேலை சரி அஜித் பவார் ஹேமந்த் சர்மா சுவந்து அதிகாரி வழக்கு என்னாயிற்று ஏன் ஊடகங்கள் அதனை விசாரிக்க வேண்டியது தானே கெஜ்ரிவால் சிசோடியா கேஸ் டெல்லி தேர்தல் போது அவ்வளவு கத்தினீர்களே தற்போதைய நிலை என்ன ஏன் இதனை ஊடகங்கள் கேள்வி கேட்கவில்லை


Keshavan.J
மே 24, 2025 12:06

டெக்னாலஜி ஆஃபீஸ்ர் நீங்கள் ஏன் தமிழ்நாடு முனிசிபல் டிபார்ட்மெண்ட் மூலமாக கேஸ் போடக்கூடாது இந்த கேள்வியெல்லாம் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை கேட்கலாமே.


Anand
மே 24, 2025 10:42

நீங்கள் என்னதான் ஆதாரங்களை சமர்ப்பித்தாலும் வானத்தில் இருந்து குதித்த நீதிமான்கள் கண்களுக்கு தெரியாது, செவிகளுக்கு எட்டாது.


VENKATASUBRAMANIAN
மே 24, 2025 08:17

இடைக்கால தடைக்கே உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி என்று ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் கூவின. திமுக அடிவருடிகள் கத்தினார்கள். இனிமேல் புரியும் இதன் ஆட்டத்தை.


Kasimani Baskaran
மே 24, 2025 07:48

அரசு அமைப்பை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை எத்தனை முறை விசாரித்தது - என்னென்ன துப்பு துலக்கினார்கள் என்பதை கேட்டு அதன் பின்னர் நீதிமன்றம் ஒரு முடிவு எடுத்து இருக்கலாம். கஜானாவில் ஊழல் என்பது நாட்டையே அழித்து விடும்.


நீலமேகம், கோவை
மே 24, 2025 07:31

என்னதான் ஆதாரங்கள் சமர்ப்பித்தாலும் நீதிபதிகள் நேர்மையாக இருக்கணுமே, இப்போதெல்லாம் அதுவே பெரிய கவலையாகி விட்டது சாமான்யர்களுக்கு..


D Natarajan
மே 24, 2025 07:29

SC உடனே கலைக்கப்பட வேண்டும். கபில் சிபல் சிங்க்வி ஆகியோர் வாதாடுவதை தடை செய்ய வேண்டும். இல்லையேல், நாடு உருப்படாது


Chandrasekaran Balasubramaniam
மே 24, 2025 08:09

மிகவும் சரியான கருத்து.


Shekar
மே 24, 2025 08:23

நம்ம ஊர்ல வில்சனை விட்டுடீங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை