உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொடூர வார்டனுக்கு மரண தண்டனை; பள்ளிக் குழந்தைகளை துன்புறுத்திய வழக்கில் கோர்ட் அதிரடி

கொடூர வார்டனுக்கு மரண தண்டனை; பள்ளிக் குழந்தைகளை துன்புறுத்திய வழக்கில் கோர்ட் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இட்டாநகர்: அருணாசல பிரதேச பள்ளி ஒன்றில், 21 பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.அருணாச்சல பிரதேசம் ஷி-யோமி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதி வார்டனாக இருந்தவர் யும்கென் பாக்ரா,33. இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை விடுதியில் இருந்த 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் 15 பேர் 6 முதல் 15 வயதிற்குள் உட்பட்டவர்கள். இந்த பள்ளியில் நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கடந்த ஆண்டு இரண்டு மாணவிகள் புகார் அளித்தனர்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் 21 மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்தது. பள்ளி வார்டன் யும்கென் பாக்ராவை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக,சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 'பள்ளி குழந்தைகளை ஆபாசப்படம் பார்க்க வைத்தது, போதை மருந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தது வரை குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.அனைத்து விசாரணைகளும் முடிவு அடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பு அளித்தார். பள்ளி குழந்தைகளுக்கு யும்கென் பாக்ரா பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனால் அவருக்கு நீதிபதி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேருக்கு தலா 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
செப் 28, 2024 13:20

மூணுபேரையுமே உடனே தொங்கவிடுங்க ........


Indian
செப் 28, 2024 12:16

சூப்பர் , தீர்ப்பு கொடுத்தா மட்டும் போதாது . அதை நிறைவேற்றணும் .


Ramesh Sargam
செப் 28, 2024 12:08

அவன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும், அங்கும் இதே தண்டனை கொடுக்கப்படவேண்டும் காலதாமதம் இல்லாமல். அந்த மரண தண்டனையை நிறைவேற்றும் மற்ற கொடூர கைதிகள் முன் அது நடக்கவேண்டும். அதை பார்த்தாவது அவர்கள் திருந்துகிறார்களா என்று பார்ப்போம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை