உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம்; பீஹாரில் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ

சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம்; பீஹாரில் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில், தேஜ கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு பாட்னாவில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. வரும் 6ல், முதல் கட்டமாக, 121 தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பீஹாரில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. ஒருபுறம், பிரதமர் மோடி போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ராவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அவர் காங்கிரஸ், ஆர்ஜேடி பீஹாரின் அடையாளத்தை அழிக்க விரும்புகின்றன என குற்றம் சாட்டி இருந்தார். இதற்கிடையே தேஜ கூட்டணிக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முசாபர்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் லாலு பிரசாத் தலைமையிலான ஆர்ஜேடி கட்சியை கடுமையாக சாடி பேசினார். மறுபுறம் பெகுசராய் பகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் குளத்தில் குதித்து மீனவர்களுடன் இணைந்து மீன்பிடித்து ஓட்டு சேகரித்தார்.காலையிலிருந்தே பீஹார் தேர்தல் களம் பரபரப்பாகவே இருந்து வருகிறது. தற்போது, மாலை நேரத்தில் தேஜ கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு பாட்னாவில் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.திறந்தவெளி வாகனத்தில் தாமரை சின்னத்தை காட்டியவாறு, மக்கள் அனைவரும் தேஜ கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

நல்லாட்சி!

இதற்கிடையே பீஹார் தேர்தல் பிரசாரம் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி கூறி இருப்பதாவது: தேர்தல் பிரசார கூட்டத்திற்கு எனது குடும்ப உறுப்பினர்கள் ஏராளமானோர் வந்து தங்கள் ஆசிகளை வழங்கினர். பீஹார் மக்கள் நல்லாட்சி செய்யும் அரசை மீண்டும் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளனர் என்பதற்கான தெளிவான அறிகுறி இது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பிரேம்ஜி
நவ 03, 2025 08:56

இந்த நாட்டில் எல்லாவற்றையும் பார்க்க கூட்டம் வரும்! மக்கள் தொகை அதிகம்! வேலையற்ற வீணர்கள் அதிகம்! உழைப்பின் அருமை தெரியாது! அதிர்ஷ்டத்தையும், இலவசத்தையும் விரும்பும் ஜனங்கள்! தலைவர்கள் கெட்டிக்கார்கள்! மக்களை ஏமாற்றுவது எளிது என்று தெரிந்தவர்கள்! வாழ்க ஜனநாயகம்


அப்பாவி
நவ 02, 2025 21:16

ஓட்டுப் போடுங்க ஹைன். ஒரு கோடி வேலை குடுப்போம் ஹைன். பிஹாரிகளின் வேலை தமிழ்நாட்டில் ஹைன்.


vivek
நவ 03, 2025 06:08

நீ ஓசியில் காலத்தை ஓட்டு ஹை...குடும்பத்தை காப்பாத்து வக்கில்லை ஹை...


Raja k
நவ 02, 2025 21:04

போற இடமெல்லாம் இதுதானே பன்னுறாரு,


Indian
நவ 02, 2025 19:15

உப்பை தின்னவன் தண்ணீர் குடித்தாகணும் . தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தாகணும்


SUBBU,MADURAI
நவ 02, 2025 20:18

யோவ் இந்த நேரத்துல தமிழக முதல்வரை ஏன் ஞாபகப் படுத்துற KN நேரு மாட்டுனதுல இருந்து உங்களுக்கெல்லாம் திமுகவை பார்த்தால் இளக்காரமா தெரியுது!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை