உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் அடையாள அட்டை 15 நாட்களில் வழங்கும் புதிய முறை: தேர்தல் ஆணையம் அறிமுகம்

வாக்காளர் அடையாள அட்டை 15 நாட்களில் வழங்கும் புதிய முறை: தேர்தல் ஆணையம் அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்ட 15 நாட்களில், புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற வசதியாக புதிய முறை அறிமுகம் செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.வாக்காளர்களின் வசதியை மேம்படுத்தவும், விரைவாக வழங்கும் ஒரு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுகிறது.தலைமைத் தேர்தல் ஆணையர் ஸ்ரீ ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோரால் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாவது:வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் வாக்காளர் புகைப்பட அட்டைகளை வழங்க முடியும், இதில் ஒரு வாக்காளர் புதிதாகவோ அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர்களின் விவரங்களில் ஏதேனும் மாற்றம் சேர்த்தல் நீக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.இது புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கும், தங்கள் விவரங்களைப் புதுப்பிக்கும் ஏற்கனவே உள்ள வாக்காளர்களுக்கும் பொருந்தும்.புதிய முறையில், வாக்காளர் பதிவு அதிகாரியால் அஞ்சல் துறை மூலம் வாக்காளருக்கு அட்டை வழங்கப்படும் வரை, ஒவ்வொரு கட்டத்தையும் நிகழ்நேரக் கண்காணிப்பை உறுதி செய்யும் வகையில், வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அறிவிப்புகள் வழங்கப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.n. Dhasarathan
ஜூன் 18, 2025 21:09

தேர்தல் ஆணையம் சொல்வது எல்லாம் சரி உண்மையாக நடக்குமா ? நானே பாதிக்கப்பட்டு இரண்டு வருடங்களாக போராடிக்கொண்டு இருக்கிறேன், இதுவரை சரியான பதில் இல்லை தபாலில் வரும் உங்கள் அடையாள அட்டை என்று சொல்லிக்கொண்டே தான் இருக்கிறார்கள். யாராவது சரியான வழி காட்டுங்கள்.


முக்கிய வீடியோ