உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யமுனை நதியில் விஷம் கலந்துவிட்டதாக புகார்: கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

யமுனை நதியில் விஷம் கலந்துவிட்டதாக புகார்: கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: யமுனை நதியில் ஹரியானா மாநில அரசு விஷம் கலப்பதாக குற்றம் சாட்டி இருந்த விவகாரம் தொடர்பாக, கெஜ்ரிவாலுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.யமுனை நதியில் ஹரியானா மாநில அரசு விஷம் கலப்பதாக டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டுகள் எழுப்பி இருந்தார்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஆதாரங்களுடன் ஜனவரி 29, 2025 அன்று இரவு 8 மணிக்குள் தனது பதிலை வழங்குமாறு ஆணையம் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டுள்ளது.தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் பொது நல்லிணக்கத்திற்கு எதிரான தவறான அறிக்கைகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் கூறியிருப்பதாவது:இத்தகைய குற்றச்சாட்டுகள் பிராந்திய குழுக்களுக்கும், அண்டை மாநிலங்களில் வசிப்பவர்களுக்கும் இடையே பகைமையை உருவாக்கிவிடும். சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.எனவே புகாருக்கு உண்டான ஆதாரங்களுடன், ஜனவரி 29, 2025 அன்று இரவு 8 மணிக்குள் தனது பதிலை கெஜ்ரிவால் வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sivagiri
ஜன 28, 2025 23:52

இந்த மாதிரி நோட்டீஸ் எல்லாம் இந்த பக்கம் யாருக்கும் கொடுக்கல ? , இவுங்க எப்பவுமே வடக்கு பத்தி அவதூறு பேசிட்டு ,


Anu Sekhar
ஜன 28, 2025 23:27

பொய் மன்னன். . 3 வருடம் போதாது. ஆயுள் கைதியாக வைக்கவும்.


Ganapathy
ஜன 28, 2025 23:19

யாரானாலும் நாகாக்க என்பது இவருக்கு பொருந்தாது. இவர் வெளியே இருந்தா பொது அமைதிக்கு பங்கம் உண்டாகும். எனவே இவரை கடலின் நடுவே ஆளே இல்லாத தீவின் சிறையில் வைக்க வேண்டும்.


கல்யாணராமன்
ஜன 28, 2025 23:09

தேர்தல் ஆணையம் வரலாற்றில் இதுவரை விதி மீறல்கள், அவதூறு பேச்சுக்கள் போன்றவற்றுக்கு எத்தனை முறை யார் யாருக்கு நோட்டிஸ் அனுப்பி அதன் மீது எத்தனை முறை கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது? நோட்டீஸ் அனுப்பும்போது காட்டப்படும் கடுமை தண்டனை கொடுக்கும் போது இல்லை.


panneer selvam
ஜன 28, 2025 23:08

It is not a big issue for Kejriwal . Make a false accusation on others and when he encounters the opposition in the court , immediately apologize .


Nandakumar Naidu.
ஜன 28, 2025 22:27

இவர் ஒரு கேடுகெட்ட ஜென்மம். ஹிந்தியில் "படுவா" என்றும் சொல்லலாம்.


புதிய வீடியோ