உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 வாக்காளர் அட்டை வைத்திருப்பது குற்றம்: காங்., தலைவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

2 வாக்காளர் அட்டை வைத்திருப்பது குற்றம்: காங்., தலைவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளது குறித்து விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.பீஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி, கடந்த ஜூலை மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு, மொத்தம் உள்ள 7.89 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் பேரின் பெயர்களை நீக்கியது. நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், உயிரிழந்தோர் மற்றும் இரு வேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்கள் என நீக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரவித்துள்ளன. மேலும் காங்கிரஸ் எம்பி ராகுல், எதிர்க்கட்சிகளின் ஓட்டுகள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டி வருகிறார். புகார்இந்நிலையில் பாஜவின் அமித் மாளவியா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ' காங்கிரஸ் தலைவர் பவன் கேரா இரண்டு தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்து கொண்டுள்ளார். ஜங்புரா மற்றும் புதுடில்லி ஆகிய சட்டசபை தொகுதிகளில் அவர் பதிவு செய்துள்ளார். அவரது வாக்காளர் அடையாள அட்டை எண் XHC1992338 (ஜங்புரா) மற்றும் SJE0755967 (புதுடில்லி). ஓட்டுத் திருட்டு என ராகுல் கூறுகிறார். அவருடன் இருக்கும் தொடர்பை தவற விடாத பவன் கேரா, இரண்டு வாக்காளர் அட்டை வைத்துள்ளார் . இது விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.விளக்கம்இது தொடர்பாக பவன் கேரா கூறுகையில், இதற்கு தேர்தல் கமிஷன் தான் காரணம். 2016 ம் ஆண்டு புதுடில்லி தொகுதியில் இருந்து வெளியேறிவிட்டேன். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம் கொடுத்துவிட்டேன். இன்னும் எனது பெயர் இருப்பது ஏன் என கேட்டு இருந்தார்.நோட்டீஸ்இந்நிலையில் இரண்டு வாக்காளர் அட்டை வைத்துள்ளது குறித்து விளக்கம் கேட்டு பவன் கேராவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றம். இது குறித்து வரும் 8 ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டு இருந்தது.தொடரும்இது குறித்து பவன் கேரா கூறுகையில், தேர்தல் கமிஷன் எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதற்கு மற்றுமொரு ஆதாரம். ஓட்டு திருட்டு குறித்த எங்களின் புகார்கள் ஒதுக்கப்படும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் அவசரம் காட்டுகிறது. கர்நாடகாவின் மாதவ்புரா தொகுதியில் ஒரு லட்சம் போலி ஓட்டுகள் குறித்த விவகாரத்தை ராகுல் அம்பலப்படுத்திய நிலையில், தேர்தல் கமிஷன் ஒரு ஓட்டு கூட அனுப்பாதது ஏன்? தேர்தல் கமிஷனின் தவறான நடவடிக்கைகளை தொடர்ந்து வெளிப்படுத்துவோம் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

பேசும் தமிழன்
செப் 03, 2025 08:12

நீ எப்படி இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்து இருக்கலாம் ....அதற்கு முதலில் பதில் சொல். உன்னை போல கான் கிராஸ் கட்சியில் இன்னும் எத்தனை பேர் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வைத்து இருக்கிறார்களோ? ஏற்கெனவே கான் கிராஸ் கட்சி முதலாளி இத்தாலி பப்பு இரண்டு நாடுகளின் பாஸ்போர்ட் வைத்து இருக்கிறார் என்று பேச்சு அடிப்படுகிறது.


வாய்மையே வெல்லும்
செப் 03, 2025 07:07

ராவுல் வின்சி இரட்டை நாட்டு குடியுரிமை பெற்று உள்ளது எப்படி என பிரியன் வந்தா கேள்வி கேட்கமாட்டார். ஊரானுக்கு தான் இவிங்க அற்ப கேள்விகள்


Priyan Vadanad
செப் 02, 2025 23:01

யப்பா. ரெண்டு வாக்காளர் அட்டை வைத்திருப்பவருக்கு ஒரு நோட்டீஸ் என்றால், எதையும் ஆராயாமல் அதை கொடுத்த தேர்தல் கமிஷனுக்கு எத்தனை நோட்டீஸ் போவணும்


வாய்மையே வெல்லும்
செப் 03, 2025 07:04

ஒரு ஜான் வயிறுக்கு இரண்டு தட்டு சொருவேனும்னு கேட்டு தின்றவன் தான் குற்றவாளி. கொடுப்பவனை கேள்விகேட்க வேண்டியது உச்ச நீதிமன்றம். முடிந்தால் நீங்க கேஸ் போடுங்க. இல்லாட்டி மவுனம் காக்கவும் . துள்ளிகுதித்தா உங்களுக்கு தான் சேறு பூசப்படும்


ஆரூர் ரங்
செப் 02, 2025 22:11

இதுக்கே இப்படின்னா இட்டலி, இங்கிலாந் பாஸ்போர்டெல்லாம் வைத்திருக்கும் எதிர்க்கட்சித்தலைவரை என்ன செய்யலாம் ? சீக்கிரம் நடக்கும்.


GMM
செப் 02, 2025 21:52

ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டை வைத்து இருப்பது குற்றம் என்றாலும், தேர்தல் ஆணையம் இதில் அதிகாரம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும். இதில் தேர்தல் ஆணையம் பொறுப்பும் உள்ளது. தேர்தல் நடைபெறாத போது, வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டை பதிவை மாத மாதம் தணிக்கை செய்து சீர் செய்து இருக்க வேண்டும். மாநில ஊழியர்கள் தான் கள பணியாளர்கள். பெயரை கூட ஒழுங்காக எழுத மாட்டார்கள். முன்பு எந்த ஆவணமும் கேட்பது இல்லை. தற்போது ஆன்லைன். நீதிமன்றம் ஆதார் எண் இணைக்க விடவில்லை. கோடிக்கணக்கான வாக்காளர் பதிவில் மனித தவறு இருக்கும். தவறை சரி செய்து முற்றுப்புள்ளி வைத்து முடியுங்கள்.


Ganapathy
செப் 02, 2025 21:48

அரண்ட காந்திகளுக்கு இருண்டதெல்லாம் தேர்தல் கமிஷன்..


பேசும் தமிழன்
செப் 03, 2025 08:17

போலி காந்தி என்று போடுங்கள். உண்மையான காந்தியை கேவலப்படுத்த வேண்டாம். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது அவரும் ஒரு மார்க்கமாக தான். ஒரு சார்பாக நடந்து கொண்டார். அது வேறு விஷயம்.


Tamilan
செப் 02, 2025 21:42

பாஜ தலைவருக்கு எந்த நோட்டீசும் இல்லை


ஆரூர் ரங்
செப் 02, 2025 20:54

கர்நாடக வாக்காளர் பட்டியலைத் தயாரித்தது அங்குள்ள காங்கிரஸ் அரசின் ஊழியர்கள்தானே? அப்போ அங்கே ஓட்டுத்திருட்டு நடத்துவதும் அதே கட்சிதான்.


திகழ்ஓவியன்
செப் 02, 2025 21:16

சரி அப்போ இரண்டு வோட்டர் ID ISSUE செய்த மோடியின் ECI என்ன தண்டனை


பேசும் தமிழன்
செப் 03, 2025 08:22

ஏம்பா 200 ரூபாய் உபி.. உன் டாஸ்மாக் மூளையை நினைத்தால் புல்லரிக்குது .


முருகன்
செப் 02, 2025 20:48

இது போல் பல நபர்கள் உள்ளனர் தேர்தல் கமிஷன் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடியுமா காங்கிரஸ் என்றால் வீரம் வந்து விடுகிறது


Shivakumar
செப் 03, 2025 03:40

யார் யார் இதுபோல இருக்கின்றார்கள் என்று தகவலை சேகரித்து தேர்தல் கமிஷனுக்கு அனுப்புங்க. அவர்கள் நடவடிக்கை எடுக்கின்றார்களா இல்லையா என்பது தெரிந்துவிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை