உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் சட்டசபை தேர்தல் எப்போது? இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் கமிஷன்

பீஹாரில் சட்டசபை தேர்தல் எப்போது? இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் கமிஷன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தல் தேதியை இன்று (அக் 06) மாலை 4 மணிக்கு தேர்தல் கமிஷன் அறிவிக்கிறது.பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவ., 22ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில், உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஜனநாயக கடமை இதைத் தொடர்ந்து தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், பாட்னா சென்றிருந்தார். தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகளுடன் அவர், தேர்தல் நடத்துவது குறித்த முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது தீபாவளிக்குப் பின் வரும் சாத் பண்டிகை முடிந்ததும் தேர்தலை நடத்துமாறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். மேலும், நிறைய கட்டங்களாக நடத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் பீஹார் சட்டசபை தேர்தல் தேதியை இன்று (அக் 06) மாலை 4 மணிக்கு தேர்தல் கமிஷன் அறிவிக்கிறது. இது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ