உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் வெற்றிக்கு ஆலோசனை கட்டணம் ரூ. 100 கோடி

தேர்தல் வெற்றிக்கு ஆலோசனை கட்டணம் ரூ. 100 கோடி

பாட்னா : ''தேர்தல் வெற்றிக்கு ஆலோசனை கூறுவதற்கு கட்சிகளிடம் இருந்து குறைந்தபட்சம், 100 கோடி ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளேன்,'' என, 2021ல், தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு வியூகம் வகுத்து தந்த தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர், தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர். துவக்கத்தில், பெரிய அரசியல் பின்புலமோ, ஆர்வமோ இவருக்கு இருந்ததில்லை. ஐ.நா., நிதியுதவியுடன், ஆப்ரிக்காவில் நடந்த சுகாதாரத் திட்டங்களில் பணியாற்றினர்.அப்போது, இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக, இவர் கட்டுரை எழுதினார்.இது, அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் கவனத்துக்கு சென்றது. தன் மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னையை தீர்ப்பது தொடர்பாக, கிஷோரிடம் மோடி ஆலோசனை கேட்டார்.

அமோக வெற்றி

அதற்காக குஜராத் வந்த கிஷோர், 2012 சட்டசபை தேர்தலில், மோடிக்கு சில யோசனைகள் சொன்னார். அதை மோடி செயல்படுத்திப் பார்த்தார். தேர்தலில் அமோக வெற்றி கிடைத்தது.அதன் பிறகுதான், கட்சியில் சீனியர்கள் பலரையும் தாண்டி, 2014 லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார் மோடி. தேசிய அளவில், அவருடைய பிரசாரத்துக்கு பல வியூகங்களை கிஷோர் வகுத்துக் கொடுத்தார். மோடியும் வெற்றி பெற்று பிரதமரானார்.இதைத் தொடர்ந்து, பிரஷாந்த் கிஷோர் இந்தியாவின் முன்னணி தேர்தல் வியூக அமைப்பாளராக உருவெடுத்தார். சி.ஏ.ஜி., என்ற பெயரில், ஓர் அமைப்பை நிறுவினார். அது, ஐபேக் என்ற பெயரில், தேர்தல் வியூக நிறுவனமாக மாறியது.நாடு முழுதும் பல கட்சிகள் கிஷோரை தேடி வந்தன. தி.மு.க.,வும் அதில் அடக்கம். நாட்டில், 10 மாநிலங்களில் தன் வியூகத்தால் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியதாக கிஷோர் கூறுகிறார்.இந்நிலையில், 2022ல், ஜன் சுராஜ் என்ற அமைப்பை நிறுவிய பிரசாந்த் கிஷோர் , அதை இந்தாண்டு அக்டோபர், 2ல், அரசியல் கட்சியாக அறிவித்தார்.அடுத்த ஆண்டு இறுதியில், பீஹாரில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை குறிவைத்து துவக்கப்பட்ட இந்தக் கட்சி, தற்போது மாநிலத்தில் நடக்க உள்ள, நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பங்கேற்கிறது. அதற்கான பிரசார கூட்டத்தில் கிஷோர் பேசியது, நாடெங்கும் விவாதிக்கப்படுகிறது.

வசதியில்லை

அவர் சொன்னதாவது: தேர்தலை சந்திக்க நிறைய பணம் தேவை; அது, கிஷோரிடம் இல்லை என்று பலர் நினைக்கின்றனர். பந்தல் போடவும், மேடை அமைக்கவும் கூட எனக்கு வசதி இல்லை என்கின்றனர்.நான் என்ன தொழில் செய்கிறேன், எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்ற விபரம் தெரியாததால் அப்படி நினைக்கின்றனர். கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் தயார் செய்து கொடுக்கிறேன். அதற்கு குறைந்தபட்சம், 100 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கிறேன்.இன்றைய தேதி வரை, 10 மாநிலங்களில் என் வியூகத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அப்படியானால் எவ்வளவு சம்பாதித்து இருப்பேன் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒரு கட்சிக்கு ஆலோசனை வழங்கினாலே, அடுத்த இரண்டு ஆண்டுகள் பீஹாரில் பிரசாரம் செய்வதற்கான நிதி எனக்கு கிடைத்து விடும்.இவ்வாறு கிஷோர் கூறினார்.கடந்த, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசுச்கு, ஐபேக் நிறுவனம், பிரசார யுக்திகளை வடிவமைத்தது.தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.,வுக்கும் பிரசார திட்டத்தை வகுத்து தந்தது. இதற்காக, தி.மு.க., 360 கோடி ரூபாய் கொடுத்ததாக அப்போது செய்திகள் வந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

அருண், சென்னை
நவ 03, 2024 18:04

தமிழ் நாட்டுல மக்களுக்கு தெரிந்து திட்டம் போட்டு திருடுவதற்கு கூலியாய் 360 கோடி...4000 கோடி...தெருநாய்களுக்கு கருத்தடைக்கு ஒதுக்கிய காசு எங்க போச்சோ தெரியலையே... தெருநாய் கூட்டம் ஒழிஞ்சா மாதிரி தெரியலையே... பெருகிதான் இருக்கு...எது எதுக்கு பெயர் சொல்லி திருடுவது என்று விவஸ்தை இல்லை இந்த கூட்டத்துக்கு..


வாய்மையே வெல்லும்
நவ 03, 2024 17:29

பிஹாரி மாடலுக்கு பிடிச்ச ஆளு ஏன்னா இவங்க ஜெயிப்பதில் அந்தாளு ஐடியா கொடுக்கிறார். ஜெயிச்சபின்னே டுவெச கூப்பாடு வீர மணியாறு விடுவார். அதேமாதிரி இவிங்க குடும்பத்தில் யாராவது தகிடுதத்தம் செஞ்சு வருமானவரி ல மாட்டினா ஆலோசகரை மறக்காமல் அழைப்பார்கள் . ப்ராஹ்மணன் வேணும் .. ஆனால் செலக்ட்டிவ் அம்னீஷியா விதிமுறையை பயன்படுத்தி அதே ப்ராமணனை வசைபாடுவதும் அதே வாயி தான் . அரசியல் பிழைப்பு இப்படி பச்சூந்திதனம் செய்ஞ்சு பிழைக்கவேண்டிய கீழ்த்தர வேலை செய்வது தான் மாடல் அரசு லட்சணம்


Azar Mufeen
நவ 03, 2024 17:20

ஆக எல்லா கட்சிகளும் சேர்ந்துதான் நம்ம பிரதமரும், முதல்வரும் ஐக்கியம்


பேசும் தமிழன்
நவ 03, 2024 15:56

தமிழகம் விடியாமல் போக கட்டணம்.......தமிழர்களுக்கு இருண்ட காலம் வர கட்டணம்...... 300 கோடி


Venkatesh
நவ 03, 2024 15:30

இந்த 200 ரூபாய் ஊ₹பி, பிரஷாந்த் கிஷோரை பற்றி கருத்து சொல்லும் போது திராவிட மாடலை கொள்ளைக்காரர்கள் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டது


venugopal s
நவ 03, 2024 14:33

எங்கே இவரை 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சியை வெற்றி பெற வைக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். பிறகு ஒப்புக் கொள்கிறோம் இவர் உண்மையிலேயே திறமைசாலி என்று!


raja
நவ 03, 2024 15:18

அதை விட மிக முக்கியம் டாஸ்மாக் டுமிழன் ரூவா 2000 ஓசி குவார்ட்டர் ஒரு பிரியாணி கொடுப்பவன் அவன் கொள்ளைக்காரன் என்று தெரிந்தும் இல்லை என்றால் அவன் காட்டும் ஒரு எந்த விலங்குக்கும் ஓட்டு போட சொன்னாலும் ஒட்டு போடுவான் என்பதை அறியாதவனா நீ உடன் பிறப்பே...


பேசும் தமிழன்
நவ 03, 2024 16:02

அவருக்கு பணம் கொடுக்காமலும்.... வெற்றி பெற தான் போகிறார்கள்..... நோட்டா கட்சி என்று கூறிய ஆட்கள் எல்லாம் ....பாராளுமன்ற தேர்தலில் வாங்கிய ஓட்டுக்களை பார்த்து ...... பேயடித்தது போல் அரண்டு போய் பேதியாகி போய் கிடக்கிறார்கள் .


hari
நவ 03, 2024 21:07

அடடே அடடே. நம்ம வேணுகோபால் கொதாடிமைகு ஒரு 500 ரூபா extra கொடுங்கப்பா


raja
நவ 03, 2024 14:16

இதுலேருந்து என்ன தெரியுதுன்னா காசுக்காக ஆரியர்கள் கொள்ளை அடிப்பவனை கொள்கைகாரன் என்றும் திருடனை ஏமாற்றுபவன் பொய் சொல்லுபவனை எல்லாம் உத்தமன் என்றும்.... நல்லது செய்பவனை நயவஞ்சகன் என்று சொல்ல தயங்காதவர்கள் என்று தெரிகிறது ...


முருகன்
நவ 03, 2024 14:06

திமுகவை மட்டும் பேசுவது சாரியா


raja
நவ 03, 2024 15:12

தமிழனை சுரண்டும் கயவர்கள் திருட்டு திராவிட ஓங்கோல் கோவால் புற கொள்ளை கூட்டத்தை பற்றி தானே தமிழன் பேசமுடியும் உடன் பிறப்பே .. அடுத்தவருக்கு ஓட்டு போட வில்லையே...


Sivagiri
நவ 03, 2024 13:29

மஹாத்மாகாந்தி வழியில் / அண்ணல் அம்பேத்கர் வழியில் / காமராஜர் வழியில் / விவேகானந்தர் வழியில் / வள்ளலார் வழியில் / இவர்களையெல்லாம் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு மக்களுக்கான நல்லாட்சியை கொடுங்கள் - என்று ஆலோசனை வழங்க, இவ்வளவு .:.பீஸ் வாங்குறது நியாமமான ஒன்றுதான் - - இப்படியாக, இவரது ஆலோசனை பெற்று ஆட்சி அமைப்பவர்களும் நாட்டை கொள்ளை அடிக்காமல் - மக்களுக்காக தன்னலமற்று கடுமையாக உழைத்து, சேவை செய்து கொண்டிருக்கிறார்கள் - - -


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 03, 2024 13:09

நூறு கோடி கொடுத்த மவராசனுக்கு, ஒண்ணுக்கு பக்கத்துல எத்தனை சைபர் போடணு போட்டா நூறு கோடியாகும்ன்னு யாராவது சொல்லிக் கொடுத்தாங்களா? இல்லாட்டி ஒரு துண்டு சீட்டுல தமிழ்லயாச்சும் எழுதிக்கொடுக்க சொல்லுங்க


புதிய வீடியோ