உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடக்கின்றன: முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் உறுதி

இந்தியாவில் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடக்கின்றன: முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் உறுதி

கோவை: '' இந்தியாவில் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடக்கின்றன,'' என முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் எஸ்ஓய் குரேஷி, ஓபி ராவத் மற்றும் அசோக் லவாசா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் லோக்சபா தேர்தல் மற்றும் மஹாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஓட்டுகள் திருடப்பட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனை தேர்தல் கமிஷன் மறுத்தாலும் ராகுல் தனது குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வருகிறார். இதனையடுத்து இது குறித்து பிரமாணப்பத்திரத்தில் ராகுல் கையெழுத்து போட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். ஆனால், இதற்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவத்துள்ளது.இதனிடையே கோவையில் நடந்த ' இந்தியா டுடே' விவாத நிகழ்ச்சியில் முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் எஸ்ஓய் குரேஷி, ஓபி ராவத் மற்றும் அசோக் லவாசா ஆகியோர் பங்கேற்றனர்.அப்போது 2018 முதல் 2020ம் ஆண்டு வரை தேர்தல் கமிஷனராக இருந்த அசோக் லவாசா கூறியதாவது: இந்தியாவில் தேர்தல்கள் நேர்மையாக நடக்கிறது என கருதுகிறேன். கடந்த கால வரலாறு இதனை நிரூபிக்கும். ஓட்டுத் திருட்டு என்பது தேர்தலுக்காக எழுப்பப்படும் கோஷம் ஆகும். யாருக்கு யார் ஓட்டுப் போட்டார்கள் என தெரியாத போது, இந்த குற்றச்சாட்டை எப்படி புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.ஓபி ராவத் கூறுகையில், '' அரசியல் மோதல்களைத் தவிர்ப்பதற்கு தேர்தல் என்பது பொதுவான வழி. தேர்தலின் போது எதுவும் நடக்காது. அனைத்தும் சுமூகமாக நடக்கும் என எதிர்பார்ப்பது அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு ஆகும். இந்தியத் தேர்தல்கள் தங்கத்தின் தரம் போல் கருதப்படுகிறது. மிகவும், நேர்மையான , சுதந்திரமான மற்றும் நம்பகத்தன்மையான தேர்தல்கள் ஒன்றாக உலகின் பெரும்பான்மையான ஜனநாயகங்களால் பாராட்டப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இவர் 2015 முதல் 2018 வரை தேர்தல் கமிஷனராகவும், 2018 ஜன.,21 முதல் டிச., 1 வரை தலைமை தேர்தல் கமிஷனராகவும் பணியாற்றி உள்ளார்.2010 முதல் 2012 ம் ஆண்டு வரை தலைமை தேர்தல் கமிஷனராக பணியாற்றிய எஸ்ஓய் குரேஷி கூறியதாவது: ஓட்டுத் திருட்டு என்பது அரசியல் கோஷமாக பார்க்கிறேன். நேர்மையான தேர்தல் நடத்த சுத்தமான வாக்காளர் பட்டியல் தேவை. அதேநேரத்தில் வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்கள் நியாயமானவை. இந்தியாவின் தேர்தலுக்கும் மற்றும் அதன் ஒருமைப்பாட்டுக்கும் வாக்காளர் பட்டியல் தான் அடித்தளத்தை அமைக்கின்றன. வாக்காளர் பட்டியல் சுத்தமாக இருக்காத வரை, தேர்தல்களை நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருத முடியாது. 100 கோடி வாக்காளர்களை கருத்தில் கொண்டு, பெரும்பாலான விஷயங்கள் துல்லியமாக நடக்கின்றன. சில அரசியல் பிரச்னைகள் பெயரை கெடுக்கிறது. இதற்கு நாம் கவலைப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

மணியன்
செப் 09, 2025 14:05

இந்த குரேஷி காலத்தில்தான் ஏராளமான பங்களாதேஷிகள் வட மாநிலங்களில் குறிப்பாக பிஹார், ஜார்கண்ட் மாநிலங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
செப் 08, 2025 22:30

தமிழ்நாட்டில் வந்து பாருங்க தேர்தல் எப்படி நடக்கிறதென்று. பிறகு நீங்களே சொல்வீர்கள் தமிழ் நாட்டிற்கு இனி தேர்தல் தேவையில்லை ஏலம் விட்டுவிடலாமென்று. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறைந்து வருவது நாட்டிற்கு நல்லதல்ல.


மனிதன்
செப் 08, 2025 22:03

.முதலில் ராகுல் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரபூர்வமான பதிலை தாருங்கள்... பிறகு நான்கு பேசவைக்கலாம்... நீங்க இனிமேல் என்ன கதறினாலும் உங்கள்மேலிருந்த நம்பிக்கை மக்களுக்கு போய்விட்டது...


ஆரூர் ரங்
செப் 08, 2025 21:59

வீடுவீடாக சென்று வாக்காளர் பட்டியல் திருத்துவது சேர்ப்பது மாநில அரசு ஊழியர்கள். அதில் தவறு இருந்தால் அதே மாநில அரசுகள் தேர்தல் ஆணையம் மீது குற்றம் சாட்டி மத்திய ஆளும் கட்சி திருட்டுத்தனம் என்று பேசுகின்றனர். இந்த அநியாயத்தின் மூல காரணம் வாய்மூடி மவுனம் காக்கும் கோர்ட்.


Modisha
செப் 08, 2025 21:38

ஈரோடு இடைத்தேர்தல் கூடவா


ராஜா
செப் 08, 2025 21:24

அம்புட்டும் திருட்டு ஓட்டு தேர்தல் போல இதுவும் பொய் பித்தலாட்டம் போல


venugopal s
செப் 08, 2025 21:20

வேலிக்கு ஓணான் சாட்சி என்பார்கள், அது போல் உள்ளதே!


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 08, 2025 21:16

நம்பிட்டோம் .ஆனா தேர்தல் நடந்த அன்று தேர்தல் ஆணையம் வெளியிடும் புள்ளி விபரங்கள் வாக்கு எண்ணும் அன்று மாறுபடுகிறதே. அதுமட்டும் இல்லாமல் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை ஒருபோதும் ஆணையம் வெளியிடுவதில்லையே, மாறாக ,பதிவான வாக்கு சதவீதம் தானே வெளியிடுகிறது. அடுத்து வாக்குச்சாவடியில் விதிகளை மீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லையே.


G Mahalingam
செப் 08, 2025 21:38

மாநில அதிகாரிகள் மாநில அரசுக்கு கட்டு பட்டு சில தவறை செய்கிறார்கள். அப்படி செய்யாவிட்டால் தேர்தல் முடிந்த பிறகு‌ மீண்டும் மாநில அரசு காலில் தான் விழ வேண்டும்.‌‌ இடமாற்றம் அல்லது சம்பள கட் அல்லது பழி வாங்க படுவார்கள்.


Abdul Rahim
செப் 08, 2025 20:54

ஒட்டு திருட்டு நிரூபிக்கப்படும்போது வக்காலத்து வாங்குற அத்தனைபேருக்கும் இருக்கு ரிவிட்டு


ஈசன்
செப் 08, 2025 20:50

ஆமாமாம். மிகச் சுதந்திரமாக மாநில தேர்தல் ஆணையமும் மாநில அரசும் இணைந்து நேர்மையாக செயல் படுகிறது. தமிழகத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலின் போது ஒரு பெரிய அரங்கில் மக்கள் அடைந்து வைக்கப்பட்டு இருந்ததை வீடியோ எடுத்து வெளியிட்டார்கள். நடவடிக்கை என்ன என்பதும் தெரிய வில்லை. இப்படி இருக்க தேர்தல் நேர்மையாக நடக்கிறதாம். சபாஷ் உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். நாடு நன்றாக உருப்படும்.


புதிய வீடியோ