வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்தியா இந்தியர்கள் என்றாலே மனித-நேயத்திற்க்கு சொந்தக்காரர்கள் தானே
அருமையான சேவை பாராட்டுக்கள்
மனித நேயத்திற்கு கிடைத்த வெற்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
ராஞ்சி: தண்டவாளம் அருகே யானை குட்டி ஈன்றதை பார்த்த வனத்துறை அதிகாரி கொடுத்த, தகவலின் பேரில், 2 மணி நேரம் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதையறிந்து, பலரும் வனத்துறை, ரயில்வே அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உள்ளன. அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு நிலக்கரி எடுத்து செல்லும் ரயில்களுக்காக பார்ககானா மற்றும் ஹசாரிபாக் இடையே அடர்ந்த வனப்பகுதியில் ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் வனவிலங்குகள் அடிக்கடி சுற்றி திரிந்து கொண்டிருக்கும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p4w0k90y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று அதிகாலை நேரத்தில் சினையாக இருந்த யானை ஒன்று குட்டி ஈன்றெடுக்கும் வலியில் ரயில் தண்டவாளத்திற்கு அருகே சிரமப்பட்டு கொண்டிருந்தது. அப்பகுதியில் இருந்த வனத்துறை அதிகாரி, இதைக்கண்டதும் ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார்.ரயில் சேவை நிறுத்தம் இதையடுத்து அந்த வழியில் சரக்கு ரயில் போக்குவரத்து இரண்டு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. தண்டவாளத்தில் இருந்த யானை குட்டி ஈன்ற நிலையில் அங்கிருந்து நகர்ந்து சென்றது. தாயும், சேயும் பத்திரமாக ரயில் தண்டவாளத்தில் இருந்து சென்றபிறகே ரயில் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.யானையின் பிரசவத்திற்காக ரயில் சேவையை இரண்டு மணி நேரம் நிறுத்தி வைத்த ரயில்வே அதிகாரிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. தாயும், குட்டி யானையும் தண்டவாளத்தில் இருந்து செல்லும் வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக, வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியதாவது: மனித-விலங்கு மோதல்கள் பற்றிய செய்திகளுக்கு அப்பால், மனித-விலங்கு இணக்கமாக, வாழ்வதை எடுத்துரைக்கும் இந்த சம்பவத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரயிலை இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்து யானை குட்டி ஈனுவதற்கு உதவிய வனத்துறை அதிகாரிகளின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தியா இந்தியர்கள் என்றாலே மனித-நேயத்திற்க்கு சொந்தக்காரர்கள் தானே
அருமையான சேவை பாராட்டுக்கள்
மனித நேயத்திற்கு கிடைத்த வெற்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே