உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்ணை கொன்ற யானை பிடிபட்டது

பெண்ணை கொன்ற யானை பிடிபட்டது

ஹாசன்: ஹாசனில் மக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை யானை, கும்கி யானைகள் உதவியால் நேற்று பிடிபட்டது.ஹாசன் மாவட்டம், பேலுாரின் கோகூடு கிராமத்தை சேர்ந்த சுசீலம்மா, 60, காபி தோட்டத்தில் நேற்று முன்தினம் கூலி வேலை செய்து கொண்டிருந்த போது, அவரை காட்டு யானை மிதித்து கொன்றது. கோபமடைந்த கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதையறிந்த வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மூன்று யானைகளையும் பிடிக்கும்படி உத்தரவிட்டார்.நேற்று காலை மத்திகோடு, துபாரே யானைகள் முகாம்களில் இருந்து பீமா, கஞ்சன், பிரசாந்த், ஹர்ஷா, தனஞ்செயா, மகேந்திரா, எகலவ்யா ஆகிய ஏழு தசரா யானைகள் வந்தன. பூஜை செய்த பின், காட்டு யானையை பிடிக்கும் முயற்சி துவங்கியது.வனத்துறையின் சிறப்பு அதிரடி படையினர் வனப்பகுதிக்கு சென்றனர். நான்கு மணி நேர தேடுதல் வேட்டையில், சுசீலம்மாவை மிதித்து கொன்ற ஒற்றை யானைக்கு, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ