மேலும் செய்திகள்
டயர் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்
13-Mar-2025
தனது நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 70 ஊழியர்களில் 67 பேருக்கு, புது நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்து கருணை காட்டியுள்ள முதலாளிக்கு பாராட்டுகள் குவிகிறது.பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் 'ஓகே கிரெடிட்' என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹர்ஷ் போகர்னா. இவரது நிறுவனத்தில் வேலை செய்த 70 பேர் பல காரணங்களுக்காக, கடந்த 18 மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.ஆனால், ஊழியர்களை நீக்கியதற்காக ஹர்ஷ் போகர்னா வருத்தப்பட்டார். பணி நீக்கம் செய்யப்பட்ட 70 ஊழியர்களையும் அவ்வப்போது தொடர்பு கொண்டு பேசினார். 'உங்களுக்கு என்ன திறமை உள்ளது. அந்த திறமைக்கு எந்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்' என்று எடுத்து கூறியதுடன், வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்கவும் உதவி செய்தார். தற்போது 67 ஊழியர்கள் வேறு நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். மூன்று பேருக்கு மட்டும் இன்னும் வேலை கிடைக்கவில்லை.பணியில் இருந்து 70 ஊழியர்களை நீக்குவதற்கு, மூன்று மாதங்களுக்கு முன்பே அவர்களிடம் கூறினோம். தற்போது 67 பேர் வேறு வேலையில் உள்ளனர். வேலை கிடைக்காத 3 பேருக்கு 2 மாத சம்பளம் கூடுதலாக வழங்கி உள்ளோம். ஊழியர்களை பணிநீக்கம் செய்தது எனது தவறு. 'ஒரு நிறுவனத்தின் நிறுவனராக நான் செய்த கடினமான விஷயத்தில் இதுவும் ஒன்று. நீங்கள் ஒருவரை வேலைக்கு அமர்த்தி குடும்பத்தில் ஒருவர் போல நடத்தினால், அவர்களை நீக்கும்போது குடும்பத்தில் ஒருவரை போன்று நடத்துங்கள்' என்று, இணையத்தில் ஹர்ஷ் போகர்னா பதிவிட்டு உள்ளார். அவரது முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்தன. - நமது நிருபர் -
13-Mar-2025