உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதே முதன்மையான பணி; டில்லியில் பிரதமர் மோடி பேச்சு

இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதே முதன்மையான பணி; டில்லியில் பிரதமர் மோடி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதே அரசின் முதன்மையான பணி' என டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.டில்லியில் 2024ம் ஆண்டுக்கான, ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற்றவர்களை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: வீரம், புதுமை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியாவில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் திறமையானவர்களாக திகழ்கின்றனர். நமது இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதே அரசின் முதன்மையான பணி. ஒவ்வொரு துறையிலும் புதிய மாற்றங்களை காணலாம். இதனால், நமது இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயாராக்க வேண்டும். நமது இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட உழைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எனது அரசு சீக்கிய குரு கோவிந்த் சிங்கின் மகன்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் 'வீர் பால் திவாஸ்' கொண்டாட முடிவு செய்தது. இப்போது, ​​இந்த நாள் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு தேசிய உத்வேகத்தின் திருவிழாவாக மாறியுள்ளது. எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் இருந்தாலும் நாடு மற்றும் தேச நலனை விட பெரியது ஏதுமில்லை. நாட்டுக்காக ஒவ்வொரு பணியையும் சிறப்பாக செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

பாரதி
டிச 27, 2024 10:52

21 வயதில் வருமானம் இல்லாத இளைஞன் இருக்கக் கூடாது.... 25 வயதில் திருமணம் ஆகாத இளைஞன் இருக்கக் கூடாது... அதுக்கு முதல்ல சட்டம் கொண்டு வாங்க.... அது உங்களால்தான் முடியும். அது நாட்டுக்கும் அவசியம்....


Sampath Kumar
டிச 27, 2024 08:59

அய்யா ஜி அப்போ நீங்க முதலில் பதவி விலகி இளைஞர்களுக்கு வழி விட்டு ஒரு முன் உதாரணமாக இருக்கலாமே ஜி செய்வீர்களா ??/


veera
டிச 27, 2024 10:22

உன் பரம்பரை கொத்தடிமை பதவியை ராஜினாமா செய்வியா...200 ரூபாய் போன போவுது..செய்விய...நீ சேய்வியா


அப்பாவி
டிச 27, 2024 08:44

கவுனர் பதவிக் காலம் முடிஞ்சும் இன்னும் ஒரு இளைஞர் பதவில ஒட்டிக்கிட்டிருக்காரு. சூப்பர் வாய்ப்பு ஹைன்.


D.Ambujavalli
டிச 27, 2024 06:07

85 / 90 வயதானாலும், stret இலாவது சட்டசபைக்கோ, வருவதும், ‘இதுதான் என் கடைசித் தேர்தல்’ என்று சொல்லிக்கொண்டே அடுத்தடுத்து 6/ 8 தேர்தலுக்கும் போட்டியிடுவதுமாக சீனியர்கள் இருந்தால், இளைஞர்கள் அதிகாரத்தை எண்ணிக்கப்பார்க்கக்கூட இயலுமா? பள்ளிப்பருவத்திலேயே குடி, போதை என்று ஒரு சமுதாயத்தையே கெடுத்துவிட்டிருக்கிறது ஆளும் அரசு இவர்கள் அதிகாரத்துக்கு வந்து என்ன செய்துவிடப் pokiraarkal?


Sivagiri
டிச 26, 2024 22:35

அப்போ நீங்க யாருக்கு ஆதரவு ? ஸ்டாலினுக்கா , உதயநிதிக்கா இன்பநிதிக்கா ? டௌட்ட க்ளியர் பண்ணுங்கோ


GMM
டிச 26, 2024 18:34

இளைஞர்களுக்கு அதிகாரம். தற்போது கொடுக்கப்பட்ட அதிகாரத்தை அமுல் படுத்த முடியவில்லை. அதிகார விதியின் தவறை சீர் செய்ய முடியவில்லை. மத்திய அரசு அதிகாரம் கீழ் மாநில நிர்வாகம் இயங்கவில்லை. இரட்டை அதிகாரம் நாட்டை செயல்பட விடாது. நீதி, நிர்வாக அதிகார கால வரம்பு இல்லை. ஏன் ? பிஜேபி காங்கிரஸ் வகுத்த குழப்பமான அதிகாரத்தை முதலில் சீர் செய்ய வேண்டும். 1. சமூக பொருளாதார மற்றும் சாதி கணக்கீடு 2011. மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு 2010 ல் எடுக்கப்பட்டது. இதன் தேவை என்ன? நிலை என்ன?


Constitutional Goons
டிச 26, 2024 18:24

75 வயது மோடிக்கு இருக்கும் பதவி ஆசை மற்றவர்களுக்கு இருக்காதா?


RAMAKRISHNAN NATESAN
டிச 26, 2024 17:51

திமுகவின் அயலக இளைஞர் ஜாஃபர் சாதிக் குறித்து ????


venugopal s
டிச 26, 2024 16:56

ஆனால் நான் மட்டும் எத்தனை வயதானாலும் பிரதமர் பதவியில் இருந்து இறங்க மாட்டேன்!


veera
டிச 26, 2024 18:10

இத பார்றா. ஒரு கொத்தடிமை சொல்லுது.....ஒரே சிரிப்பா வருது வேணு..... சரி சரி ஒடி போய் 200 ரூபாய் கூலி வாங்கிக்கோ


hari
டிச 26, 2024 18:28

இப்படிக்கு.... வாழ்நாள் திராவிட கொத்தடிமை


பாரதி
டிச 27, 2024 10:54

பிரதமர் பதவினா என்னன்னு கூட தெரியாத..


JaiRam
டிச 26, 2024 16:13

இத்தாலி திருட்டு கும்பலை காப்பாற்றுவது நம் பிரதமர் தான், ஆகவே தான் அவர்கள் எந்த உழைப்பிலும் ஜெயிலுக்கு போகாமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆகவே இந்த கருத்து கிட்டத்தட்ட உண்மையாக இருப்பதற்கே வாய்ப்புள்ளது


RAMAKRISHNAN NATESAN
டிச 26, 2024 17:12

ஓங்கோல் கும்பலை யார் காப்பாற்றுகிறார்கள் ????


G Mahalingam
டிச 26, 2024 17:16

கோர்ட் தான் தண்டனை கொடுக்கமுடியும். விசாரணை ஆமை வேகம். 10 ஆண்டுகளாக ஜாமீனில் உள்ள சோனியா ராகுல் .


முக்கிய வீடியோ