வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஸ்வீட் எடு, கொண்டாடு. பட்டாசு வெடித்து மகிழ்ந்திரு.
ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில், இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; ராணுவம் தரப்பில் மூன்று வீரர்கள் காயமடைந்தனர். ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள குடார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நம் ராணுவம், ஜம்மு - காஷ்மீர் போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அங்கு விரைந்தனர். அப்போது வனப் பகுதிக்குள் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் சுட்டதில், அடையாளம் தெரியாத இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் தரப்பில் மூன்று பேர் காயமடைந்தனர். பிடிபட்ட பாக்., நபர்
இதற்கிடையே, ஜம்மு அருகே சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானியரை, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவரது பெயர் சிராஜ் கான் என்பதும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள் சர்கோதா பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதே போல் நேற்று முன்தினம், பஞ்சாப் எல்லையையொட்டிய பாகிஸ்தான் பகுதியில் இருந்து, நம் நாட்டுக்குள் ஊடுருவிய ஐந்து பேரை, பி.எஸ்.எப்., வீரர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், ட்ரோன்கள் மற்றும் ஹெராயின் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்வீட் எடு, கொண்டாடு. பட்டாசு வெடித்து மகிழ்ந்திரு.