உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நக்சல்களுடன் மோதல்: பாதுகாப்பு படை வீரர் பலி

நக்சல்களுடன் மோதல்: பாதுகாப்பு படை வீரர் பலி

ராய்ப்பூர்:சத்தீஸ்கரில் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது போலீசாருக்கும், நக்சல்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், சி.ஆர்.பி.எப்., வீரர், நக்சல் பலியாகினர்.சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள தும்ரேல் கிராமத்தில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிறப்பு பிரிவான வனத்தில் போரிடும் பயிற்சி பெற்ற 'கோப்ரா' படையினர், மாவட்ட ரிசர்வ் போலீசார், சிறப்பு அதிரடிப்படை போலீசார் அடங்கிய கூட்டுக்குழுவினர், அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, நக்சல்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மாறி மாறி துப்பாக்கியால் சுட்டனர். இதில், கோப்ரா வீரர் ஒருவரும், நக்சல் ஒருவரும் பலியாகினர்.மற்றொரு வீரர் காயம் அடைந்ததாகவும், அவர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் வாயிலாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
மே 23, 2025 09:33

இந்திய நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் பேச்சு செயல்கள் இரும்பு கரம் கொன்டு ஒடுக்கப்படவேண்டும் தேவைப்பட்டால் விசாரணை இல்லாமல் தூக்குத்தண்டனை கொடுக்கலாம்