வலிகளுக்கு முடிவு!
ஹரியானாவில் 10 ஆண்டுகளாக ஆட்சியுள்ள பா.ஜ., அரசு மாநிலத்தின் வளம், அதிகாரம், கனவு ஆகியவற்றை பறித்து பலதரப்பு மக்களுக்கும் வலியை தந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மக்களின் வலியை முடிவுக்கு கொண்டு வரப்படும். மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும்.ராகுல் , எதிர்க்கட்சித் தலைவர், காங்.,ஊழல் தலைவருக்கு ஆதரவு!
சித்தராமையாவுக்கு எதிரான ஊழல் வழக்கில், குற்றச்சாட்டுக்களை முதலில் முன் வைத்ததே காங்கிரஸ் தான். அதில் தான் தற்போது லோக்ஆயுக்தா நீதிமன்றம் அவரை குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக சேர்த்துள்ளது. ராகுலும், சோனியாவும் ஊழல் தலைவருக்கு ஆதரவு தருகின்றனரா? சுதன்ஷு திரிவேதி, செய்தி தொடர்பாளர், பா.ஜ.,சிக்கிவிட்டார் சித்து!
சித்தராமையாவுக்கு எதிராக லோக்ஆயுக்தா வழக்கு பதிவு செய்துள்ளது. அவரை இப்போது யாராலும் காப்பாற்ற முடியாது. தார்மிக கொள்கை கொஞ்சமாவது மிச்சமிருந்தால் அவர் பதவி விலக வேண்டும். கர்நாடக மக்களும் சித்தராமையா பதவி விலக வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.ஷானவாஸ் ஹுசைன், செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,