உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பி.எப்.ஐ., அமைப்பு மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு..

பி.எப்.ஐ., அமைப்பு மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு..

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பி.எப்.ஐ., எனப்படும் பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு பயங்கரவாத்துக்கு நிதி திரட்டியதாகவும், அந்த அமைப்புக்கு சொந்தமான, 56 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பி.எப்.ஐ., அமைப்பு பயங்கரவாதத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பல்வேறு மாநிலங்களிலும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் பல்வேறு மாநிலங்களின் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ., அமைப்பினர் சோதனைகள் நடத்தினர். இதையடுத்து, 2022ல் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த அமைப்பிற்கு சொந்தமான 35 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு, 56 கோடி ரூபாய். அறக்கட்டளை, தனியார் நிறுவனங்களின் பெயர்களில் இந்த சொத்துக்கள் இருந்தன. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இந்த அமைப்பினர் நிதி திரட்டினர். இதற்காக, கேரளா, கர்நாடகா, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த அமைப்பினருக்கு, 29 வங்கி கணக்குகள் துவங்கப்பட்டன. இந்த அமைப்பினருக்கு, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில், 1,300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். சமூக பணிக்காக துவங்கப்பட்டதாக கூறப்பட்ட இந்த அமைப்பு, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது. 'ஜிகாத்' வாயிலாக இந்தியாவில் இஸ்லாமிய நடவடிக்கைளை பரப்பும் செயல்களில் இந்த அமைப்பு ஈடுபட்டது. அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துவதாக கூறிய இந்த அமைப்பினர், போராட்டங்களை வன்முறைக்களமாக்கினர். உள்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RAMAKRISHNAN NATESAN
அக் 19, 2024 13:53

மதச்சார்பற்ற நாடு பிடிக்கவில்லை என்றால் அவர்களை அவர்கள் விரும்பும் நாட்டுக்கு அனுப்பிவிடுங்கள் ..... அவை ஏற்காவிட்டால் ஏகன் அரேஞ்சு பண்ணிக்கொடுக்கும் அந்த எழுபத்திரண்டு கன்னியரை அனுபவிக்க அனுப்பிவிடுங்கள் ......


ஆரூர் ரங்
அக் 19, 2024 11:02

முன்பே திமுக ஜவாஹிருல்லா பயங்கரவாத ஆட்களின் குடும்பங்களுக்கு அன்னியச் செலாவணி திரட்டிய வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார். கழகங்களுக்கு அவர் மீது கைவைக்க அச்சம் என்பதால் சிறைக்குச் செல்லாமல் எம்எல்ஏ ஆகவும் ஆகிவிட்டார். இது PFI SDPI ஆட்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது.


Barakat Ali
அக் 19, 2024 09:15

பி எஃப் ஐ மீதான விசாரணை இரண்டாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது .......... வேடிக்கையான சட்டங்கள் ..... வேடிக்கையான அமைப்புக்கள் ......


jayvee
அக் 19, 2024 08:45

PFI அமைப்பின் பிரிவான SDPI மீதும் விசாரணை வேண்டும்.. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு sdpi எவ்வளவு பணம் கொடுத்தது என்ற விசாரணையும் வேண்டும்.


Kasimani Baskaran
அக் 19, 2024 07:29

இடதுசாரி அமைப்புக்கள் மற்றும் அது சார்ந்த அறக்கட்டளைகள் போன்ற கூட்டமைப்புக்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக ஒரு பொழுதும் இருந்தது கிடையாது. அவைகளை இணக்கமாக கண்காணித்து தவறுகள் இருப்பின் அவற்றின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும்.


சாண்டில்யன்
அக் 19, 2024 07:21

நேற்று லெபனானுக்கு மனிதாபிமான உதவிகள் இன்று பி எப் ஐ க்கு தடை நாளை ....


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 19, 2024 09:19

காமன்சென்ஸ் தேவை ..... லெபனான் நமக்கு எதிரி நாடு இல்லை .... ஆனால் பி எப் ஐ தீவிரவாத அமைப்பு ...... இரண்டையும் எப்படி ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியும் ????


RAMAKRISHNAN NATESAN
அக் 19, 2024 13:55

இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் அவர் பார்க்கிறார் என்றால் அவரைப்பற்றி நீங்கள் புரிந்து கொள்ளவேண்டாமா ??


முக்கிய வீடியோ