உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகா உள்துறை அமைச்சர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

கர்நாடகா உள்துறை அமைச்சர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடக உள்துஐற அமைச்சர் பரமேஸ்வராவுக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில், உள்துறை அமைச்சராக பரமேஸ்வரா இருந்து வருகிறார். இந்த நிலையில், பரமேஸ்வராவுக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத்துறை திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். துமகுருவில் உள்ள ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக்கல்லூரி, ஸ்ரீ சித்தார்த்தா தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மற்றும் பெங்களூரு புறநகரில் உள்ள நெலமங்கலத்தில் உள்ள சித்தார்த்தா மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்திலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ரெய்டுக்கான காரணங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், 'ரெய்டு பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. அதைப் பற்றி அறிந்து விட்டு பதிலளிக்கிறேன்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Keshavan.J
மே 21, 2025 18:02

கர்நாடக உள்துறை மந்திரியின் உள்ளடி , வாழ்க ஜன நாயகம்


V Venkatachalam
மே 21, 2025 17:55

இதெல்லாம் சரி. எப்போ உள்ள தூக்கி போடுவீங்க? இவன் குடும்பமே இந்திய சாப்பாட்டை சாப்பிடுது.. வாத்ரா தான் வெளியே இருக்கான்.


என்றும் இந்தியன்
மே 21, 2025 17:38

இந்தியாவில் வசிக்கும் நீ இந்தியனாக முதலில் மாறு அப்போ தான் இந்த கள்ள வியாபாரம் லஞ்ச லாவண்யம் அவ்வளவாக இருக்காது


Barakat Ali
மே 21, 2025 15:52

கர்னாடக முதல்வர் சித்தராமையாவே தண்ணி காட்டிக்கொண்டிருக்கிறார், அவருக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் இருந்தும் .......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை