உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செந்தில் பாலாஜி ஜாமினை  ரத்து செய்ய கோர்ட்டில் அமலாக்கத்துறை வலியுறுத்தல்

செந்தில் பாலாஜி ஜாமினை  ரத்து செய்ய கோர்ட்டில் அமலாக்கத்துறை வலியுறுத்தல்

புதுடில்லி: 'செந்தில் பாலாஜி சாட்சிகளுக்கு அழுத்தம் தந்து, வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனடிப்படையில் பணமோசடி நடந்ததாக, அமலாக்கத் துறையினர் அவர் மீது வழக்கு பதிந்து, கடந்த ஆண்டு ஜூனில் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இந்த வழக்கில், அவருக்கு கடந்த செப்., 26ல் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து சிறையில் இருந்து வெளிவந்த அவர் ,உடனடியாக அமைச்சராக பொறுப்பேற்றார்.இதை குறிப்பிட்டு செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, வித்தியாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ் ஒகா தலைமையிலான அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: செந்தில் பாலாஜிக்கு எதிராக சாட்சியாக உள்ளவர்கள், அவருக்கு கீழ் ஏற்கனவே வேலை செய்தவர்கள். செந்தில் பாலாஜி தற்போது மீண்டும் அமைச்சராக உள்ளதால், இந்த வழக்கு விவகாரத்தில், தனக்கு சாதகமாக செயல்பட வலியுறுத்தி, அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. மேலும், விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையும் தொடர்ந்து இழுத்தடிக்கப்படுகிறது. நீண்ட காலத்துக்கு விசாரணையை இழுத்துக் கொண்டே செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன், கூடுதல் சாட்சிகளை வழக்கில் சேர்த்து செயல்படுகின்றனர். இதற்கு விசாரணை அமைப்புகளும் ஒத்துழைக்க அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, செந்தில் பாலாஜி மீதான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும். பல முனைகளிலும் கடுமையான அழுத்தம் கொடுத்து தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Dharmavaan
டிச 20, 2024 18:26

சாட்சிகளை அதிகரித்து வழக்கை இழுக்கிறார் என்பதை புரிந்து கொள்ளும் அளவு கூட ...இல்லையா ,அல்லது கண்துடைப்பு நாடகமா நீதிக்கு


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 15, 2024 14:05

அமலாக்கம் ரொம்பவே லேட்டு ..... அதற்கும் முன்பே பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் மனு போட்டதால்தானே என்னது திரும்ப அமைச்சராகிட்டீங்களா என்று உச்சம் கேட்டது ..........


M Ramachandran
டிச 15, 2024 13:31

சர்க்காரியா கமிஸன் நீதிபதி கூறிய வார்த்தைகள் ஊழல் புரிந்துள்ளது அது விஞ்சாணமுறை ஊழலால் எதிர் தரப்பு அதை நிரூபிக்க இயல வில்லை


வைகுண்டேஸ்வரன்
டிச 15, 2024 09:49

55-60 ஆண்டுகளுக்கு முன், சர்காரியா கமிஷன் இருந்தது போல. நான் லாம் பிறக்கும் முன்பு நடந்து முடிந்து விட்டது பற்றி இன்னும் பேசும் தாத்தா க்களைப் பார்க்க சிரிப்பு வருகிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 15, 2024 14:09

மிஸ்டர் க்ளீன் தேனெடுத்தவன் புறங்கையைச் சுவைப்பது இயல்பே என்ற உதாரணத்தைக் கொடுத்தது ஏன் ????


Dharmavaan
டிச 20, 2024 18:23

நாம் இதிகாச புராண சரித்திரம் பேசும்போது இது நீண்ட காலமில்லை


வைகுண்டேஸ்வரன்
டிச 15, 2024 09:06

சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கவோ, ஜாமீனில் வரவேண்டிய அவசியமே இல்லை. 8 வருடங்களுக்கு முன் நடந்த விஷயம். தூங்கி எழுந்து 471 நாட்கள் சிறையில் இருந்தார். இன்னும் குற்றப் பத்திரிகை தயாரிக்க முடியவில்லை. தெருவில் போற வர்றவங்க லாம் மனு குடுக்கிறார்கள். செம காமெடி.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 15, 2024 14:07

இன்னும் குற்றப் பத்திரிகை தயாரிக்க முடியவில்லை? குற்றப்பத்திரிகையே தாக்கலாகாத நிலையிலா உச்சம் கடுமையான நிபந்தனைகளை விதித்து ஜாமீனில் அனுப்பியது ????


நிக்கோல்தாம்சன்
டிச 15, 2024 05:55

சர்க்காரியா கமிஷன் கூறிய வார்த்தைகளை இன்னமும் யார் யாரெல்லாம் நினைவில் வைத்துள்ளீர்கள்


முக்கிய வீடியோ