உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டாக்டர்களின் பாதுகாப்பை அதிகரியுங்கள்: மாநில அரசுகளுக்கு அறிவுரை

டாக்டர்களின் பாதுகாப்பை அதிகரியுங்கள்: மாநில அரசுகளுக்கு அறிவுரை

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் இளம் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தங்களின் பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kjv1h1m1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி அனைத்து மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி.,களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் அபூர்வா சந்திரா அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: நோயாளிகள், பொது மக்கள் அதிகம் வரும் மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் அதற்கான நடவடிக்கைகளை உறுதிபடுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் குறித்து செப்.,10ம் தேதிக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Easwar Kamal
செப் 04, 2024 21:55

ஏற்கனவே நீட் மூலம் மாணவர்களுக்கு குடைச்சல் கொடுத்தது பத்தாதுன்னு இப்போ படிச்சு முடிச்சு மக்களுக்கு மருத்துவம் பார்க்க வந்தால் இப்போ இந்த காம கொடூரர்கள் தொல்லை.


Ramesh Sargam
செப் 04, 2024 19:19

நேற்று தமிழகத்தில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை, அவர் ஒரு DSP rank. அவர் ஒரு போராட்ட கும்பலை தடுத்து நிறுத்தியபோது, அந்த கும்பலில் இருந்த ஒருவன் அந்த பெண் போலீஸ் அதிகாரியையே தாக்குகிறான். ஆக நம் நாட்டில் போலீஸ் அதிகாரிகளுக்கும் சரியான பாதுகாப்பு இல்லை. இந்த நிலையில் அவர்கள் எப்படி மற்றவர்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 04, 2024 18:26

செய்தி வாசிப்பாளர்களுக்கு பாதுகாப்பு தேவை இல்லையா ????


GMM
செப் 04, 2024 18:19

சில மணிநேரம் சேவை செய்யும் நீதிமன்றம் மாநில போலீஸ் இருந்தும் மத்திய பாதுகாப்பு படையின் கீழ் உள்ளது. 24 மணி நேரம் இயங்கும் அரசு மருத்துவமனையில் மாநில போலீஸ் 3 ஷிப்ட் காவல் புரிய வேண்டும். இவர்கள் சம்பளம் டீன் ஒப்புதலுக்கு பின் வழங்க வேண்டும். மத்திய அரசு பஞ்சாயத்து அலுவலகம் போல் உத்தரவு போடுவது சரியா? கலெக்டர் போன்ற அனைத்து முக்கிய அலுவலகத்தில் போலீசார் காவல் புரிய வேண்டும். எதற்காக மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தனியார் பாதுகாப்பு. ?


முக்கிய வீடியோ