உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நக்சல் பிரச்னைகளில் இருந்து விரைவில் இந்தியா விடுபடும்: அமைச்சர் அமித் ஷா

நக்சல் பிரச்னைகளில் இருந்து விரைவில் இந்தியா விடுபடும்: அமைச்சர் அமித் ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: நக்சல் பிரச்னைகளில் இருந்து இந்தியா மிக விரைவில் விடுபடும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில், சிஆர்பிஎப் படையின் கோப்ரா பட்டாலியன் மற்றும் மாநில காவல்துறையின் கூட்டுக் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையில், ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் முக்கியப்புள்ளி சஹ்தேவ் சோரன் என்ற பர்வேஷ் ஒழிக்கப்பட்டுள்ளான். கூடுதலாக சஞ்சல் என்ற ரகுநாத் ஹெம்பிராம் மற்றும் ராம்கேலவன் என்ற பிர்சென் கஞ்சு ஆகியோரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து, வடக்கு ஜார்க்கண்டில் உள்ள பொகாரோ பகுதியில் இருந்து நக்சல்வாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. விரைவில், முழு நாடும் நக்சல் பிரச்னையிலிருந்து விடுபடும்.இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Venugopal S
செப் 16, 2025 11:16

அவர் மட்டும் தான் வடை சுடுவாரா? நாங்களும் சுடுவோம்ல!


ராஜா
செப் 15, 2025 20:50

கணவாய் வழியாக வந்த நபர்கள் மீதும் நடவடிக்கை தேவை,


Tamilan
செப் 15, 2025 19:52

அந்நிய கூட்டு நக்சல் கும்பலிடமிருந்து நாடு விரைவில் மீட்கப்படும்


Ramesh Sargam
செப் 15, 2025 18:59

எப்பொழுது அந்த தேசதுரோகிகள் இடம் இருந்து இந்தியா விடுபடும்?


Priyan Vadanad
செப் 15, 2025 17:45

எல்லோரும் இந்தி கத்துக்கிடணும், இந்தி நாட்டின் மைய மொழியாய் இருக்கணும்னு ஆமைஷா பேசியிருக்கும் செய்தியையும் பிரசுரித்தால் அணைத்து தமிழர்களுக்கும் தேவாமிர்தமாக இருக்கும். நன்றி.


ஆரூர் ரங்
செப் 15, 2025 18:09

12 வருசத்துக்கு முன்னாடி பசி பேசியது இதுதான்.


Artist
செப் 15, 2025 19:48

ஆங்கிலத்தில் பெயரை எழுத உங்களுக்கு எந்த சங்கோஜமும் கிடையாது ..இந்தி கற்றுக்கொண்டால் என்ன குறைந்து விடும் ? பேசினபிரிட்ஜ் ஸ்டேஷன் தாண்டினாலேயே ஒரு சமோசா விலை கேக்கறதுக்கே அபிநயம் பிடிக்க வேண்டியிருக்கே


vivek
செப் 15, 2025 20:22

எங்களுக்கு புரியும் ...சில பிரியமான வடைகளுக்கு புரியாது


முக்கிய வீடியோ