உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளியேற்றுவது அவசியம்!

வெளியேற்றுவது அவசியம்!

ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி மிகவும் அவசியம். பீஹார், மேற்கு வங்கம் என எந்த மாநிலமாக இருந்தாலும் ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவது அவசியம். ஆனால், ஓட்டு வங்கி அரசியலுக்காக இந்தப் பணியை காங்., எதிர்க்கிறது. அக்கட்சிக்கு தேசத்தின் நலன் முக்கியமல்ல நித்யானந்த் ராய் மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,

தோல்விக்கு காங்., காரணம்!

பீஹார் சட்டசபை தேர்தலில், 'மஹாகட்பந்தன்' கூட்டணி படுதோல்வி அடைந்ததற்கு காங்., கட்சியே காரணம். பிரசாரத்துக்கு வந்த ராகுல், பிரியங்கா போன்ற தலைவர்கள் கடமைக்கென்று பேசினரே தவிர, எந்த ஆர்வமும், ஈடுபாடும் காட்டவில்லை. அனைவரையும் ஒருங்கிணைக்க அவர்கள் தவறி விட்டனர். சந்தோஷ் குமார் ராஜ்யசபா எம்.பி., - இ.கம்யூ.,

ஓட்டு வங்கி அரசியல்!

பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, டிச., 6ல், மேற்கு வங்கத்தில் பேரணி நடத்த ஆளும் திரிணமுல் காங்., திட்டமிட்டிருப் பது, முழுக்க முழுக்க ஓட்டு வங்கி அரசியல். வகுப்புவாத நல்லிணக்கத்தை பரப்புவது அக்கட்சியின் நோக்கமல்ல. சிறுபான்மையினரின் வளர்ச்சியை மம்தா அரசு விரும்பவில்லை. அவர்களை முடக்குகிறது. சுபாஷ் சர்கார் முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை